என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 172171
நீங்கள் தேடியது "slug 172171"
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடுவதை தடை செய்யும் சட்டத்துக்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #bananimal #Hindutemples #sirisena
கொழும்பு:
வேண்டுதல்கள் நிறைவேறும்போது ஆலயங்களில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து படைப்பது இந்து மக்களிடையே பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. இதுதவிர, திருவிழாக்களின்போது கிடா வெட்டுதல் போன்ற சம்பிரதாயங்கள் நடத்தப்படுகின்றன.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கவுனவட்டே நரசிம்மர் ஆலயத்தில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடும் பழக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் சிலோன் இந்து மகாசபை என்ற அமைப்பு முன்னர் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் கோயில்களில் உயிரினங்களை பலியிடும் பழக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இலங்கையில் நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்களில் இத்தகைய பழக்கத்துக்கு தடை விதிக்கும் சட்ட முன்வரைவு ஒன்றை அந்நாட்டின் இந்து மத விவகாரங்கள் துறை மந்திரி டி.எம். சாமிநாதன் முன்மொழிந்திருந்தார்.
அந்த முன்மொழிவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான மந்திரிசபை இன்று வழிமொழிந்துள்ளது. அந்த முன்மொழிவில் கூறப்பட்டுள்ளதாவது.
விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிடும் பண்டைக்கால வழிபாட்டு முறைகளை அனைத்து தரப்பு இந்து மக்களும் ஏற்றுகொள்வதில்லை. பக்தர்களுக்கு மனரீதியாகவும், சுகாதாரரீதியாகவும் ஏற்படும் தீமைகளைப்பற்றி கவலைப்படாமல் கோயில் வளாகங்களில் ஆடு, கோழிகளை பலியிடும் இந்த பழக்கத்துக்கு இந்து மதத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்து அமைப்புகளும் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த பழக்கத்துக்கு தடை விதித்து தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
அகிம்சை மற்றும் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமை என்பதுதான் பெரும்பாலான மதங்களின் கொள்கையாக உள்ளதாலும், இலங்கையில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்த கொள்கையை பின்பற்றி வருவதாலும் பாவச்செயலாக கருதி இந்த பழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்வரைவு சட்டத்துறை அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பின்னர், இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் மூலம் அரசின் அறிவிக்கையாக வெளியாகி, பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டமாக அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #bananimal #Hindutemples #sirisena
குஜராத் மாநிலத்தில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைத்து நடவடிக்கை எடுக்கு திட்டத்தை சூரத் நகராட்சி மேற்கொண்டுள்ளது. #Aadhaar
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் வைர நகரம் என்றழைக்கப்படும் சூரத் நகரம் பட்டுத் துணி உற்பத்தி மற்றும் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிலுக்கு மிகவும் பிரசித்தியான நகரமாகும்.
இந்நகரில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை நகராட்சி அலுவலக பணியாளர்கள் பிடித்து சென்று கொட்டடியில் அடைத்து வைக்கின்றனர். உரிமையாளர் தேடிவரும்போது அபராத தொகையை பெற்றுகொண்டு அவற்றை விடுவித்து வந்தனர்.
பிடிபட்ட முதல் நாளில் முதல் முறையாக பிடிப்பட்டால் 1800 ரூபாய் அபராதம், மேலும் கொட்டடி கட்டணமாக ஆயிரம் ரூபாயும், தீவனம் மற்றும் பராமரிப்பு செலவுக்கென 650 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நான்காவது முறையாக பிடிபட்டால் உரிமையாளர்களிடம் கால்நடைகள் ஒப்படைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து கொண்டு செல்லும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கால்நடைகளை பிடித்து செல்ல வாகனங்களில் வரும் நகராட்சி பணியாளர்களுக்கும் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதமும், மோதலும் கூட நடப்பதுண்டு.
இந்நிலையில், ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘பல்லேலக்கா, பல்லேலக்கா’ பாட்டின் சரணத்தில் வரும் ‘ஏலே.. ஆடு, மாடு மேலே உள்ள பாசம், வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்’ என்னும் பாடல் வரியைப்போல், கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைத்து நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை சூரத் நகராட்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக, தங்களிடம் பிடிபடும் கால்நடைகளின் காதுகளில் வரிசை எண்ணுடன் கூடிய பிளாஸ்டிக் பட்டைகளை இணைத்து அதை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் அதிகாரிகள் இணைத்துள்ளனர்.
இதன் மூலம் கால்நடைகள் பிடிபட்டதும் உடனடியாக அவற்றின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கவும், அபராதம் விதிக்கவும் வசதியாக உள்ளதாக சூரத் நகராட்சி உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 25 ஆயிரம் கால்நடைகள் அவற்றின் உரிமையாளர்களான சுமார் 1500 பேரின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 25 ஆயிரம் கால்நடைகள் விரைவில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Aadhaar
தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shepherd #Lion #Goats
ஆமதாபாத்:
குஜராத்தில் புகழ்பெற்ற கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. ஆசிய சிங்கங்களின் சரணாலயமாக விளங்கும் இந்த பூங்காவின் ஒரு பகுதி அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் பூங்காவின் எல்லையோரம் அமைந்துள்ள அம்பார்டி கிராமத்தை சேர்ந்த பவேஷ் பர்வாட் என்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி, தனது ஆடுகளை அருகில் உள்ள மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார்.
இவர் மலையை நெருங்கியதும், அங்கே புதர்களுக்கு இடையே மறைந்திருந்த 2 சிங்கங்கள் திடீரென வெளியே வந்து ஆடுகளை வேட்டையாட முயன்றன. இதை எதிர்பாராத பவேஷ் பர்வாட், அந்த சிங்கங்களை விரட்ட முயன்றார். அப்போது ஒரு சிங்கம் திடீரென அவர் மீது பாய்ந்தது.
இதனால் பவேஷ் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டை போட்டார். இதில் அவரது கைகளிலும், உடலிலும் சிங்கத்தின் நகக்கீறல்கள் விழுந்தன. இதனால் அவர் காயம் அடைந்தார்.
எனினும் விடாமல் அவற்றுடன் சண்டையிட்ட பவேஷ், இடையிடையே சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கும் அழைத்தார். இதைக்கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சத்தம் போட்டு சிங்கங்களை விரட்டினர். பின்னர் காயமடைந்த பவேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது ஆடுகளை பாதுகாக்க தொழிலாளி ஒருவர் சிங்கங்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shepherd #Lion #Goats #tamilnews

×

X