என் மலர்
நீங்கள் தேடியது "எச்டிஎப்சி"
- எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது.
- எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்பு.
எச்.டி.எப்.சி வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் சேவை பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்களுக்கு தலா இரண்டு மணி நேரத்திற்கு யுபிஐ உள்ளிட்ட சேவைகள் இயங்காது என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு காலத்தில் எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரூபே (Rupay) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் அப் பே, பேடிஎம், மொபிக்கிவிக் உள்ளிட்ட சேவைகளும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பராமரிப்புப் பணியின்போது எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- மேனேஜிங் டைரக்டராக கடந்த 2020 அக்டோபர் 27 முதல் செயல்பட்டு வருபவர் சஷிதர் ஜெகதீசன்.
- நிதியாண்டின் அறிக்கைபடி அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவும் இவரே
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களை வழிநடத்தும் தலைவர்களாக ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவங்களின் படித்தவர்களையே பார்க்க முடிகிறது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியை வழிநடத்தும் தலைவர் இது எதிலும் படிக்காதவர்.
இன்றைய தேதிக்கு ரூ.13.72 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்டது ஹெச்டிஎஃப்சி [HDFC] வங்கி. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் [சிஇஓ], மேனேஜிங் டைரக்டராகவும் கடந்த 2020 அக்டோபர் 27 முதல் செயல்பட்டு வருபவர் சஷிதர் ஜெகதீசன்.
வங்கித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள ஜெகதீஷன் 1996 ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சி வங்கியில் நிதித் துறையில் மேலாளராக சேர்ந்தார். இதற்கு முன், அவர் மும்பையில் உள்ள Deutsche Bank AG-ல் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

மும்பையில் பிறந்த இவர், மும்பை பல்கலைக்கழகத்தில் தனது பிஎஸ்சி இயற்பியல் இளங்கலை படிப்பை முடித்தார். இங்கிலாந்தில் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் பணம், வங்கி மற்றும் நிதி பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். ஜெகதீஷன் ஒரு தகுதி பெற்ற பட்டய கணக்காளரும் (CA) ஆவார்.
2023 நிதியாண்டின் அறிக்கைபடி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவும் இவரே. 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் அவரது மொத்த சம்பளம் ரூ.10.55 கோடியாக இருந்தது. ஆனால் மற்ற சிஇஓ- களை போல் தன்னை பொதுவெளியில் அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாதவர் சஷிதர் ஜெகதீசன்.