என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா சோப்ரா"

    பிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனசுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், பிரியங்காவுடன் காதல் மலர்ந்தது பற்றி நிக் ஜோனஸ் மனம் திறந்து பேசினார். #PriyankaChopra #NickJonas
    பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் காதல் மலர்ந்தது. குடும்பத்தினரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனசும் நியூயார்க்கில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது பற்றி நிக் ஜோனஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது,

    ‘‘ பிரியங்கா சோப்ரா ஒரு நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக் கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம்.



    அதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகிவிட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன். ’’ இவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.

    இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. #PriyankaChopra #NickJonas 

    ×