என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில் ஹேண்ட்பால்"

    17 வயதுக்குட்பட்டவருக்கான மாநில ஹேண்ட்பால் போட்டியில் அரியலூர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
    திருவள்ளூர் மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 17 வயதுக்குட்பட்டவருக்கான மாநில ஹேண்ட்பால் போட்டி சென்னையில் நடந்தது. இதில் அரியலூர் அணி 32-30 என்ற புள்ளிக்கணக்கில் திண்டுக்கல்லை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்று செயின்ட் பீட்டர்ஸ் கோப் பையை கைப்பற்றியது.

    கோவை அணி 3-வது இடத்தையும், காஞ்சீபுரம் 4-வது இடத்தையும் பிடித்தன. தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க இணை செயலாளருமான ஏ.சரவணன், செயின்ட் பீட்டர்ஸ் என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் எஸ்.செல்வன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். போட்டி அமைப்பு குழு செயலாளர் எம்.செந்தில் குமார் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
    ×