என் மலர்
நீங்கள் தேடியது "ஜாங்கோ"
`சூப்பர் டீலக்ஸ்' படத்தை தொடர்ந்து டப்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #MirnaliniRavi #Jango
டப்மாஷ் வீடியோ மூலம் பிரபலமான மிர்னாலினி ரவி தமிழில் `நகல்' என்ற படத்தில் முதலில் ஒப்பந்தமானார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விஜய் சேதுபதியின் `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த நிலையில், சி.வி.குமார் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் மிர்னாலினி நடிக்க இருக்கிறார். ஜாங்கோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மிர்னாலினி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, சிவாஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தை இயக்குகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. #MirnaliniRavi #Jango