search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 176796"

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

    இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பள்ளி சிறுவர்களை கடிப்பதற்கு துரத்தி சென்று அவர்களை அச்சுறுத்தி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.

    அங்கிருந்தவர்கள் அந்த தெரு நாய்களை துரத்த முற்பட்டபோது அங்கிருந்த சிற்றுண்டி கடை உரிமையாளரை கடிக்க சென்றதால் அவர் பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    எனவே இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    • நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர்.
    • திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு நாய்கள் கடித்து குதறி யுள்ளன.

    திருச்செங்கோடு:

    தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர். தெருக்களின் குறுக்கே திடீரென நாய்கள் கூட்டமாகஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அதுவும் வேகமாக சாலையை கடப்பதால் இருசக்கர வாகனஓட்டிகள் நாய்கள் மீத மோதிவிழுந்து காயமடைவது தொடர்ந்து நடந்து வந்தது.

    திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு

    நாய்கள் கடித்து குதறி யுள்ளன. காயம் அடைந்த வர்களில் நாமக்கல் ரோடு சஞ்சய், ஆயிரத்தா குட்டை தரணி, எஸ்.என்.டி.ரோடு சின்னதம்பி, கொல்லப்பட்டி உஷா, ஏ.கே.இ. ரோடு காவியா, அம்பேத்கார் நகர் பகுதியைசேர்ந்த சுசிலா , ராஜம்மாள், முத்துலட்சுமி, நேசமணி உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் சிலர் ஈரோடு தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யவும் நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்த வருகின்றனர். நாய்க்கடி மருந்துகள் இருப்பில உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகராட்சி 87 -வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் ராஜூ நகரில் தெருநாய்கள் 24 மணி நேரமும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    நள்ளிரவு நேரங்களில் ஒரு நாய் குரைக்கும்போது, அதன் சத்தத்தை கேட்டு மற்ற நாய்களும் சேர்ந்து குரைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் தூக்கம் கெடும் நிலை உள்ளது. மேலும் சிறிய குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்குவதற்காக வெளியே கடைக்கு வரும்போது நாய் துரத்தும் அவல நிலையும் உள்ளது.

    சில சமயங்களில் நாய் துரத்தும் போது ஓடிச் செல்லும் குழந்தைகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய் துரத்துவதால், அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வேகமாக சென்று தடுமாறி கீழே விழுகின்றனர்.

    கார் செல்லும்போது அந்த காரை தெரு நாய்கள் கூட்டமாக குறைத்துக் கொண்டே துரத்துகிறது. இன்னும் ஒரு சில சமயங்களில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு கடித்துக் குதறி கொள்ளும் காட்சியும் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாயும் ரத்தம் சொட்ட சொட்ட தெருகளில் ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்படுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது,

    இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது நாய்கள் கூட்டத்தைக் கண்டு பயந்து வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு நாய் துரத்தும் போது அத்தனை நாய்களும் சேர்ந்து துரத்துகிறது.

    இதனால் அடிக்கடி தலை தெரிக்க ஓடும் நிகழ்வு ஏற்படுகிறது. வீட்டின் கதவை தெரியாமல் மறந்து திறந்து வைத்து விட்டால் நாய்கள் வீட்டுக்குள் வந்து விடுகிறது. பின்னர் அந்த நாய்களை மிகவும் சிரமப்பட்டு தான் துரத்த முடிகிறது.

    மேலும் தற்போது தெருக்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால், நாய்களின் கழிவுகள் நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை நடைபயிற்சிக்காக வெளியே அழைத்துக்கொண்டு செல்லும்போது, தெரு நாய்களும் சேர்ந்து வளர்ப்பு நாயின் மீது பாய்கிறது.

    அதனை சமாளித்துக் வளர்ப்பு நாயை அழைத்து செல்வதற்குள் போதும் என்றாகி விடுகிறது. கோவை மாநகராட்சி இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் விட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்படுவது குடியிருக்கும் மக்கள்தான் என்றனர்.

    • பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
    • இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி பேருந்துநிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருவதால் தெருநாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று இரவு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்வதற்காக பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 7 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க முயன்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தெருநாய்களை துரத்திவிட்டதால் அந்த பயணி தெருநாய்களிடம் தப்பித்து சென்றார். இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியகுளத்தில் பொதுமக்களை தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடக்கு அக்ரஹாரம், பெருமாள் கோவில் பின்புறம் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. மேலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சிக்காக இந்த சாலை வழியாக சென்று வருவார்கள்.

    இதனால் இச்சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் இருசக்கர வாகனங்களில் அழைத்துச்செல்வர்.

    இங்கு தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் இந்த நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அப்பகுதி பெண்கள் மற்றும் முதியவர்கள் ஒருவித அச்சத்துடனேயே இச்சாலையை கடந்து வருகின்றனர்.

    எனவே நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    சண்டிகரில் ஒன்றரை வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சண்டிகர்:

    சண்டிகரில் உள்ள பல்சோரா பகுதியில் உள்ள பூங்காவில் நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இடத்திற்கு வந்த தெரு நாய்கள் சிறுவர்களை தாக்க தொடங்கின. நாயை கண்ட சிறுவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் நாய்களிடம் சிக்கி கொண்டான்.

    படுகாயமடைந்த ஒன்றரை வயது சிறுவனான ஆயுஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். நாய் கடித்ததில் சிறுவனுக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இது போன்ற பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. தெரு நாய்களால் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

    இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களில் தொல்லை அதிகமாக இருப்பதால் சிறுவர்களை வெளியே விட பெற்றோர்கள் பயப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×