search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிகா"

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான சுருதி ஹாசன், தனது அப்பா நான்கு வயதில் இருந்து சினிமா துறையில் இருப்பதால், அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என்று கூறியுள்ளார். #ShrutiHaasan
    சுருதி ஹாசனை கடந்த சிலகாலமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மும்பையில் நடந்த பே‌ஷன் ஷோவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ருதி, “என்னை நானே, சுய பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது.

    அதற்காகத்தான் இந்த ஒரு ஆண்டு இடைவெளி எடுத்தேன். ஒரு ஆண்டு முழுவதும், எந்தப் படங்களிலும் நடிக்காமல் என் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்தேன். இப்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். என் அப்பாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். என் அம்மாவுடன் நடிக்க விரும்புகிறேன்.

    நானும் அம்மாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார். திறமையான நடிகர்களின் மகள் என்பதால், திரையில் தோன்றும் போது அந்த அழுத்தம் உங்களுக்கு அதிகமாகிறதா என்ற கேள்விக்கு, “இது எனது வாழ்க்கை.



    நான் அவர்களைப் பெருமைப்படுத்தவே விரும்பினேன். எனது கடினமாக உழைப்பைக் கண்டு அவர்கள் பெருமைப்படுவதாக அறிகிறேன். நான் எனது சொந்த முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். அப்பா நான்கு வயதில் இருந்து இந்தத் துறையில் இருக்கிறார். அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என எனக்குத் தெரியும்” என்று கூறி இருக்கிறார். #ShrutiHaasan

    தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் ஸ்ருதிஹாசன், ரக்‌ஷ பந்தனுக்கு தன்னுடைய அம்மாவிற்கு ராக்கி கட்டி கொண்டாடி இருக்கிறார். #ShrutiHaasan
    ஸ்ருதிஹாசன் எதையும் வித்தியாசமாக செய்பவர். நேற்று நாடு முழுவதும் ரக்‌‌ஷ பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் சினிமா நடிகர், நடிகைகளும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

    அப்படிக் கொண்டாடிய சிலர் தங்களது சமூக வலைதளங்களில் அதுகுறித்து பதிவிட்டனர். அந்த வரிசையில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடியிருக்கிறார். பொதுவாக ரக்‌ஷா பந்தன் சகோதர சகோதரிகளுக்குள்தான் பெரும்பாலும் பரிமாறிக் கொள்ளப்படும்.



    ஆனால் ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இருவரும் இணைந்து இருக்கும் புகைப் படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து கூறிய அவர் “இது எனது அம்மா. நாங்கள் இருவரும் ராக்கிகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டோம். விரும்புகிற ஒருவரைக் காப்பதே ரக்‌ஷா பந்தன். சகோதரர் இல்லை, ஆனால் அம்மா இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்துவருகின்றன.
    ×