என் மலர்
நீங்கள் தேடியது "தேனி மூதாட்டி மாயம்"
தேனி அருகே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள காமராஜர்புரம் மாணிக்கபுரம் விலக்கு பகுதியைச் சேர்ந்த பெரியலிங்கையா மனைவி போலம்மாள் (வயது 70). கடந்த சில நாட்களாக இவருக்கு பல் வலி ஏற்பட்டது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக தனது வீட்டில் கூறிச் சென்றார்.
ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மகள் லதா வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.