search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலி"

    • 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது.

    உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்தது. அந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. மாலி யானை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தனியாகவே கழித்தது.

    மாலி யானை பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981-ம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால்பரிசாக வழங்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் 1990-ம் ஆண்டு ஷிவா என்ற யானை உயிரிழந்ததிலிருந்து மாலி யானை மட்டுமே இருந்தது. மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது. அவள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

    மாலி நாட்டில் பிரான்ஸ் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியகியுள்ளது. #Frenchairstrike
    பாரிஸ் :

    ஆப்பிரிக்க நாடான மாலி பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தற்போது பல்வேறு பயங்கரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் அங்கு அட்டூழியம் செய்து வருகின்றனர். எனவே அவர்களை ஒடுக்கி மாலி நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க 4 ஆயிரம் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

    தென் மேற்கு கயோ மகாணத்தில் போல் சரே வனப்பகுதி உள்ளது. அங்கு பதுங்கியிருந்து கொண்டு பிரான்ஸ் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இது புர்கினோ பாசோ நாட்டின் எல்லையில் உள்ளது.

    இந்நிலையில், பிரான்ஸ் ராணுவம் அப்பகுதியில் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், வான் தாக்குதல் நடத்திய பிறகு விமானத்தில் இருந்து தரையில் இறங்கிய பிரான்ஸ் கம்மாண்டோ வீரர்கள், கொல்லப்பட்டவன் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவன் முகமது அக் அல்மௌனர் என்பதை உறுதி செய்தனர்.

    இந்த தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு இளைஞர் உள்பட பொதுமக்கள் இருவர் பலியாகினர். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரான்ஸ் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Frenchairstrike
    அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக நுழைய முயன்ற சுமார் 13 ஆயிரம் பேரை உணவு, தண்ணீர் இன்றி சஹாரா பாலைவனத்தில் துரத்தி விட்டதாக அல்ஜீரியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    அல்ஜீர்ஸ்:

    சோமாலியா, நைஜீரியா, மாலி மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரனமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் அண்டை நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைய முயற்சிக்கின்றனர்.

    ஆனால், அவர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டு சஹாரா பாலைவனத்திற்கு துரத்தப்படுகின்றனர். 48 டிகிரி வெயில் கொளுத்தும் பாலைவனத்தில் அகதிகள் இறக்கிவிடப்படும் அவலம் கடந்த பல மாதங்களாகவே அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் சுமார் 13 ஆயிரம் அகதிகள் அவ்வாறு இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

    அவர்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பசி, தாகம் மற்றும் வெயிலின் தாக்கத்தால் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அகதிகள் பாலைவனத்தில் தஞ்சமடைந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



    அகதிகளில் பலரை ஐ.நா மீட்புக்குழு மீட்டுள்ளது. அல்ஜீரிய அரசின் இந்த செயலை ஐ.நா கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தனது மீதான குற்றச்சாட்டை அல்ஜீரிய அரசு மறுத்துள்ளது. 

    இருப்பினும் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் உதவித் தொகையை அல்ஜீரியா பெற்றுள்ளது. 

    இதுவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளின் எண்ணிக்கையை அல்ஜீரியா வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2,888 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×