என் மலர்
நீங்கள் தேடியது "சிக்கிம்"
சிக்கிம் மாநிலத்தின் புதிய கவர்னராக பீகாரை சேர்ந்த கங்கா பிரசாத் பதவி ஏற்றுக்கொண்டார். #GangaPrasad
காங்டோக் :
சிக்கிம் மாநிலத்தின் 16-வது கவர்னராக பீகாரை சேர்ந்த கங்கா பிரசாத் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்சியில் அம்மாநில பொருப்பு தலைமை தலைமை நீதிபதி மீனாக்ஷி எம்.ராய் தலைமையில் அவர் பதவியேற்றார்.
சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங், அவரது மந்திரி சபை சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்.
பீகார் மாநில சட்ட மேலவை உறுப்பினராக 18 ஆண்டுகள் பதவி வகித்த கங்கா பிரசாத், பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்ட மேலவையில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது சட்ட மேலவையின் ஆளும் கட்சி தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #GangaPrasad