என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » அசுதோஸ்
நீங்கள் தேடியது "அசுதோஸ்"
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து முக்கிய தலைவர் அசுதோஸ் விலகிய நிலையில், மற்றொறு முக்கிய முகமான ஆஷிஷ் கேதன் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். #AamAadmi
புதுடெல்லி:
டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமான ஆஷிஷ் கேதன் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பத்திரிகையாளராக இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றிய அவர் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே அரசியலில் இருந்து விலக நினைத்தேன். குடும்பம் மற்றும் நண்பர்கள் கருத்தை கேட்ட பின்னர் தற்போது கட்சியிலிருந்து விலகுகிறேன் என கேதன் கூறியுள்ளார். சமீபத்தில், மற்றொரு முக்கிய தலைவரான அசுதோஸ் விலகிய நிலையில், கேதனும் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். #AAP #Ashutosh #Resign
புதுடெல்லி:
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசுதோஸ். இவர் நேற்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணத்துக்காக தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அவர் கூறினார்.
இது குறித்து அசுதோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “அனைத்து பயணத்துக்கும் ஓர் முடிவு உண்டு. ஆம் ஆத்மி கட்சி உடனான எனது தொடர்பு அழகானது மற்றும் புரட்சிகரமானது. முற்றிலும் தனிப்பட்ட காரணத்துக்காக நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். கட்சிக்கும், எனக்கு முழு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808160413459330_1_kn2lb4da._L_styvpf.jpg)
பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்த அசுதோஸ் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டதும், அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவியதும் நினைவு கூரத்தக்கது. #AAP #Ashutosh #Resign

×
X