என் மலர்
நீங்கள் தேடியது "விரலில் எலும்பு முறிவு"
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்தபோது அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. #JonnyBairstow
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசிய பந்தை பிடித்த போது காயமடைந்தார். பந்து சரியாக அவரது இடது கை விரல்களை தாக்கியதால் வலியால் துடித்தார். உடனடியாக வெளியேறிய அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.
ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இடது கை நடுவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய தொடரில் ஆடுவது சந்தேகம் தான். 2-வது இன்னிங்சில் அவசியம் ஏற்பட்டால் பேட்டிங் செய்வார். #JonnyBairstow