என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஹிங்கியா"

    • பசியாலும் வறுமையாலும் வாடும் புலம்பெயர்ந்தோர் குறிவைக்கப்படக்கூடாது.
    • சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வன்தேசத்தினருக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளருமான சாம் பிட்ரோடா பேசியுள்ளார். பாஜகவினர் இந்த கருத்தை சர்ச்சையாகி வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விவகாரம் அரசியல் களத்தில் துருப்புசீட்டாக மாறிவருகிறது.

    சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றால் தலைநகரை சட்டவிரோத வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா அகதிகளிடம் இருந்து விடுவிப்போம் என பாஜக வாக்குறுதியில் தெரிவித்துள்ள்ளது. வங்கதேசத்தினருக்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஆம் ஆத்மி பெற்றுத்தந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

     

    இந்நிலையில் சாம் பிட்ரோடா பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பசியாலும் வறுமையாலும் வாடும் புலம்பெயர்ந்தோரைக் குறிவைப்பதை விட்டுவிட்டு காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

    அவர்கள் [ புல்மேபியர்ந்தோர் ] இங்கு வர மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தது தவறுதான். ஆனால் நாம் வங்கதேசத்தினறையும், சிறுபான்மையினரையும் குறிவைப்பதில் மட்டுமே தீவிரமாக உள்ளோம்.

    எல்லோரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதனால் நாம் சில சிரமங்களுக்கு உள்ளானாலும் அதில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. நாம் நமது வளங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது கிடையாது. அவர்கள் தங்கள் வயிற்றை நிரைப்பிகொள்ளத்தான் வழி தேடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

    சாம் பிட்ரோடாவின் இந்த கருத்து பாஜக வாய்க்கு அவலாக மாறியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, சட்டவிரோதமான குடியேறிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தியின் வலது கை சாம் பிட்ரோடா கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ், நமது நாட்டில் சட்டவிரோதமானவர்களைக் குடியமர்த்துவதற்கு எப்படி ஓவர் டைம் வேலை செய்தது என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா! என்று குறிப்பிட்டுள்ளார். 

    ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கையை இன அழிப்பு என குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது. #Rohingya #Myanmar #US
    வாஷிங்டன்:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராடி வருகின்றனர். 

    பல்லாயிரக்கணக்கானோர் பலியான நிலையில், உயிரை காக்க லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

    வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை சொந்த நாட்டுக்கே அனுப்பும் ஒப்பந்தம் வங்கதேசம் - மியான்மர் இடையே கையெழுத்தானாலும், இதுவரை அகதிகளாக உள்ளவர்கள் நாடு திரும்பவில்லை. 

    மியான்மரின் செயல்பாட்டுக்கு ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்ததோடு, ரோஹிங்கியாக்கள் மீண்டும் கன்னியத்துடன் வாழ மியான்மர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இந்நிலையில், மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையை ‘இன அழிப்பு’ என்று அமெரிக்கா கூறியுள்ளது. மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்ட மியான்மர் ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் மீது தடை விதிப்பதாகவும் அமெரிக்க கருவூல துறை அறிவித்துள்ளது. 
    ×