என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹேக்கிங்"
- எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார்.
- எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.
உலகப் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் EVM வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது என்றும் எனவே EVM முறையை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்றும் கூறியது உலக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைமுறையில் EVM குறித்த எலான் மஸ்கின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்த சமயத்தில் EVM முறையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ஆனால் EVM இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்றும் யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும் ஆரம்பம் முதலே வாதாடி வரும் ஆளும் பாஜக எலான் மஸ்கின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்திருந்தது. தகவல் முன்னாள் தொழில்நுட்பத்துறை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் EVM கள் பாதுகாப்பானது என்றும் வேண்டுமானால் உங்களுக்கு EVM இயந்திரங்களை எப்படி தயாரிக்கவேண்டும் என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்றும் எலான் மஸ்க் கருத்துக்கு பதிலளித்திருந்தார்.
உடனே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'Anything can be hacked' எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார். இந்த விவகாரம் இப்படியாக புகைந்துகொண்டிருக்கும் வேளையில் ராஜீவ் சந்திரசேகர் ஒருபடி மேலே சென்று புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, டெஸ்லா கார்களையும் ஹேக் செய்ய முடியும். ஏன் கால்குலேட்டரையும், பிரட் டோஸ்ட் செய்யும் டோஸ்டரையும் கூட ஹேக் செய்ய முடியும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹேக்கிங் என்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது. எலான் மஸ்கின் கருத்து தவறானது. போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட EVM கள் வேண்டுமானால் ஹேக் செய்யப்படலாம். எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இந்திய EVM தயாரிப்பு குறித்து அவருக்கு தெரியாது. அவை யாராலும் ஹேக் செய்யமுடியாத அதிநவீன சாதனங்கள் என்று தெரிவித்துள்ளார்.
- நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
- தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஐடி எனும் தகவல் தொழில்நுட்பம், பிடி எனும் உயிரி தொழில்நுட்பம் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழிற்சாலைகள் பெங்களூருவில் அமைந்திருப்பது தான். இதை நோட்டமிட்டு இணையதளத்தை பயன்படுத்தி தகவல்களை திருடி மோசடி செய்யும் ஹேக்கர் கும்பல் பெங்களூருவில் நடமாடுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் சென்னை மென்பொருள் நிறுவனத்தின் வெளிநாட்டு வாடிக்கையாளர் தரவு திருடப்பட்டதாக பெங்களூரு மாநகர போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதில், கம்பெனிசிவ் கிரெடிட் ரிப்போர்ட்டிங் சாப்ட்வேர் செயலியை பயனர்களால் அணுக முடியவில்லை. இது தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மர்ம நபர்கள் தங்களது நிறுவனத்தின் செயலியை முடக்கி வாடிக்கையாளர் தரவுகளை திருடி உள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஹேக்கிங் செய்தது பெங்களூருவை சேர்ந்த காவ்யா வசந்த கிருஷ்ணன், ரவிதா தேவசேனாபதி மற்றும் கருப்பையா, சென்னையை சேர்ந்த எடிசன் ரமேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவார்கள். கடந்த அக்டோபர் மாதம் 9 -ந் தேதி அதிகாலை 1 மணியளவில் சென்னையில் இருந்து தொடங்கிய 3 மணி நேர கான்பரன்ஸ் அழைப்பின்போது ஹேக்கர் செய்து மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்