search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலைப்படை"

    சவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி பவாஸ் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.
    கெய்ரோ:

    சவுதி அரேபிய நகரம் அல்புக்கரியா. இந்த நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒருவனை போலீஸ் அதிகாரிகள் கண்டனர். அவன் இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி என போலீஸ் அதிகாரிகள் சந்தேகித்தனர்.

    அவனை அவர்கள் கைது செய்ய முயற்சித்தபோது, அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு அவன் தப்பினான். ஆனால் போலீஸ் அதிகாரிகள் விடாமல் துரத்தினர்.

    அதைத் தொடர்ந்து அவன், அந்த நகர சந்தையில் காரில் இருப்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டனர். தன்னை போலீஸ் அதிகாரிகள் பார்த்து விட்டார்கள் என்பதை உணர்ந்ததும் அவன் மறுபடியும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். போலீஸ் அதிகாரிகளும் அவனை திருப்பிச்சுட்டனர். இதில் அவன் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தபோது, அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அவன் உடனடியாக அங்கு உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான்.

    அவன் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் கவரப்பட்டவன் என்றும், அவனது பெயர் பவாஸ் அப்துல் ரகுமான் எனவும் தெரிய வந்து உள்ளது. அவனிடம் இருந்து ஒரு எந்திர துப்பாக்கி, 359 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

    இந்த சம்பவம், அந்த நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    ஆப்கானிஸ்தான் ராணுவ வாகனத்தின் மீது நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். #Afghanistan #SuicideAttack
    ஜலாலாபாத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வந்த ஒருவர், ராணுவ வாகனம் ஒன்றின்மீது நேற்று மோதினார். இதில் குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் சிக்கி 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் ஆவர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலை நேரில் கண்ட ஒருவர், “குண்டுவெடிப்பை தொடர்ந்து பெரிய தீப்பந்து போல வெளிப்பட்டது. அதைக் கண்டு மக்கள் ஓட்டம் எடுத்தனர்” என்று கூறினார். இந்த தாக்குதலால் அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

    ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடக்கும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் மறுநாளான நேற்று இந்த தாக்குதல் நடந்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து உள்ளது.  #Afghanistan #SuicideAttack #tamilnews 
    ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் நேற்று இரவு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.#Suicideattack
    பாக்தாத்:

    இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில், தற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிகம் கூடும் பூங்கா ஒன்றில் தற்கொலைப்படை மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சந்தேகத்துக்கு உரிய நபர் நுழையும்போதே காவல்துறையினர் அவரை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களை மீறி உள்ளே சென்ற அந்த நபர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்' என தெரிவித்துள்ளனர்.

    மேலும், பூங்காவின் முன்பகுதியிலேயே அவன் வெடிகுண்டை வெடிக்கச்செய்ததால் பாதிப்புகள் குறைவு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் வடக்கு மற்றும் தெற்கு ஈராக் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #Baghdad #Suicideattack
    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். #Jalalabadsuicideattack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.

    இந்நகரில் உள்ள சுங்கத்துறை நிதி அலுவலகம் அருகே இன்று பிற்பகல் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி மனித வெடிகுண்டாக வெடித்து சிதறினான். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இன்று நடைபெற்ற மேலும் மூன்று தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. #Jalalabadsuicideattack  
    ×