search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூயார்க்"

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கேரட் தங்க கோழிக்கறியை சாப்பிட ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். #goldchickenwings
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், ஒரு முறை வருகை தந்தவர்கள் மீண்டும் மீண்டும் வருவதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும் ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுகிறது.



    மேலும், கோழிக்கறியை வழக்கமாக நாம் அனைவரும் பொன்னிறமாக பொறித்து உண்ணுவோம். ஆனால் அந்த பாரில் கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர். அந்த பாரில் பரிமாறப்படும் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை இந்திய மதிப்பில் 3000 ரூபாய். இருப்பினும், தங்க கோழிக்கறியை சாப்பிட வாடிக்கையாளர்கள் குவிகின்றனர். #goldchickenwings
    நியூயார்க்கில் 2 குழந்தைகளை வெட்டி கொன்ற பெண்ணிற்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #YoselynOrtega
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த கெவின் கிரீம் , மரினா கிரீம் தம்பதியின் இரண்டு குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரீமின் 6 வயது மகள் மற்றும் அவளின் இரண்டு வயது தம்பி இருவரும் யோசிலின் ஆர்டிகா என்ற 55 பெண் பராமரிப்பின் கீழ் இருந்தனர்.

    சம்பவம் நடந்த அன்று மரினா கிரீம் தனது வீட்டை திறந்து பார்த்த போது வீட்டு குளியலறையில் இரண்டு குழந்தைகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதை கண்ட அவர் அதிர்ர்சியில் உறைந்தார்.



    இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் ஆர்டிகாவை கைது செய்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் ஆர்டிகாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற  ஆர்டிகாவுக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இது கிரீம் குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  #YoselynOrtega
    ×