என் மலர்
நீங்கள் தேடியது "ஜெ.பி.எல்."
ஜெ.பி.எல். நிறுவனத்தின் புதிய ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் தள்ளுபடி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #headphones
இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜெ.பி.எல். நிறுவனத்தின் இரண்டு சாதனங்கள்: ஜெ.பி.எல். கோ பிளஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஜெ.பி.எல். T250BT ஹெட்போன் உள்ளிட்டவற்றை அறிமுகமாகி உள்ளன.
இத்துடன் ஆகஸ்டு 7, 2018 துவங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் அனைத்து ஜெ.பி.எல். சாதனங்களிலும் அதிகபட்சம் 50% வரை தள்ளுபடி பெற முடியும். மேலும் ஒவ்வொரு 50-வது வாடிக்கையாளருக்கு அவரவர் வாங்கும் பொருளுடன் இலவச ஜெ.பி.எல். ஸ்போர்ட்ஸ் இயர்போன் வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனையின் கீழ் அனைத்து சாதனங்களுக்கும் ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் துவங்கி, ஹோம் மற்றும் மல்டிமீடியா சாதனங்களும் புதிய ஜெ.பி.எல். ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுன்கிறன.
புதிய சாதனங்களின் படி ஜெ.பி.எல். கோ பிளஸ் ஆல்-இன்-ஒன் ஸ்பீக்கர் இசையை ப்ளூடூத் வழியே ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் இருந்து இசைக்கிறது. இதனுடன் 5 மணி நேர பிளேடைம் கொண்டுள்ள ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் நாய்ஸ்-கேன்சலிங் வசதி கொண்ட ஸ்பீக்கர்போன் வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் ஸ்பீக்கரை ஆஃப் செய்யாமல் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்து பேச முடியும்.

இத்துடன் ஜெ.பி.எல். TBT ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 12.5 எம்எம்-இல் டிரைவர்கள் மற்றும் ஒற்றை பட்டன் கொண்ட ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் மியூசிக் பிளேபேக் இயக்குவதோடு, அழைப்புகளையும் பேச முடியும்.
மூன்று நிறங்களில் கிடைக்கும் ஜெ.பி.எல். கோ பிளஸ் ஸ்பீக்கர் விலை ரூ.3499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஜெ.பி.எல். T205BT ஹெட்போன் விலை ரூ.2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இரண்டு சாதனங்களும் தற்சமயம் ரூ.1,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஜெ.பி.எல். சாதனங்கள் பிரத்யேகமாக ஜெ.பி.எல். வலைதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. #headphones #speakers