search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிப்பெண்"

    • புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பணிப்பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம் தங்க நகைகள் திருடுபோனது.

    இதையடுத்து, மனைவிக்கு தந்த தங்க பரிசு பொருட்கள் காணாமல் போனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, நகைகளை திருடவில்லை என பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மன உளைச்சலில் இருந்து பணிப்பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைகண்ட அவரது குடும்பத்தினர், பணிப்பெண்ணை உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிப்பெண் இன்று அழைத்து வரப்பட்டார்.
    • திமுக எம்.எல்.ஏ. வீட்டில் அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    சென்னை:

    பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிப்பெண் இன்று அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு 7 பேர் கொண்ட மருத்துவ குழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்கிறது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர்கள் இளம்பெண்ணிடம் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. வீட்டிலும் அவரது மகனின் நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    பூஜைகள் செய்து கடவுளை வர வைக்கிறேன் என பணிப்பெண் கூறிய கதையையில் மயங்கி தங்க நகைகளை கொடுத்து ஏமாந்த தம்பதிக்கு, ஒன்னரை ஆண்டுகளாக ஏமாந்துள்ளோம் என்பது பின்னர்தான் தெரியவந்துள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் கோரமங்களா நகரத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி ஆலை நடத்தி வருபவர் ஜெயந்த். இவரது வீட்டில் எடுபிடி வேலை செய்து வருபவர் ரேஷ்மா. சில நாட்களுக்கு முன்னர், ஜெயந்திடம் சென்று தானும், தனது கணவரும் பூஜைகள் செய்து கடவுளை வர வைக்கிறோம் என கூறி கதை கட்டியுள்ளார்.

    மேலும், ‘நீங்கள் வீட்டில் இருக்க கூடாது. சில தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வேண்டும்’ என நிபந்தனைகள் விதித்துள்ளார்.
    ரேஷ்மாவின் பொய்யில் மயங்கிய ஜெயந்த் மற்றும் மனைவி, நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சில நகைகளையும் கொடுத்துவிட்டு வெளியூர் சென்றனர்.

    சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர்கள், லாக்கரை திறந்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர். ரூ.4 கோடி மதிப்பிலான வைர, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பொருட்கள் காணாமல் போயிருந்தன. இதனை அடுத்து, அவர்கள் உடனே போலீசில் புகாரளித்தனர்.

    புகாரை அடுத்து விசாரணை நடத்திய போலீசார் ரேஷ்மா மற்றும் அவரது கணவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் ஜெயந்த் மட்டுமல்ல போலீசாரே தலை சுற்றும் அளவுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கடந்த ஒன்னரை ஆண்டுகளாக ரேஷ்மா, ஜெயந்தின் வீட்டில் சிறிது சிறிதாக திருடி வந்துள்ளார். திருடப்பட்ட பணம் மற்றும் நகையில் கார், பைக் மற்றும் குத்தகைக்கு அடுக்குமாடி குடியிருப்பு என சகலமும் வாங்கி குவித்துள்ளனர். இதனை அடுத்து, மேற்கண்ட பொருட்களை கைப்பற்றிய போலீசார் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
    ×