என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.எஸ்."

    தஜிகிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    துஷான்பே:

    அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சிலர் தஜிகிஸ்தான் நாட்டில் சுற்றுலா பயணிகளாக சென்று கொண்டிருந்தனர். தலைநகர் துஷான்பேயின் தென்கிழக்கே சைக்கிளில் சென்ற அவர்கள் மீது அங்கு வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதலும் நடத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

    இந்த தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 2 பேரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 4 பேர் பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தஜிகிஸ்தானில் வெளிநாட்டு சைக்கிள் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர். ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. #Indonesiaparliament #tougherantiterrorlaw
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அந்நாட்டின் பிரசித்தி பெற்ற 3 தேவாலயங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. இந்த புதிய சட்ட வரைவில், பயங்கரவாத அமைப்புகளில் இணைவோர், அமைப்பிற்காக ஆட்களை சேகரிப்போர் ஆகியோர் மீது காவல்துறையே நேரடியாக வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த புதிய சட்டவரைவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் பயங்கரவாத இயக்கங்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. #Indonesiaparliament #tougherantiterrorlaw
    ×