என் மலர்
நீங்கள் தேடியது "அல் சபாப்"
சோமாலியாவில் 27 ராணுவ வீரர்களை கொன்று ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் பயங்கரவாத குழு அறிவித்துள்ளது. #Somalia #alShabaab
மொகாடிஷு:
ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இயங்கி வரும் அல் சபாப் பயங்கரவாத குழு சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி வரும் இந்த இயக்கம் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றதாக உள்ளது.
இந்நிலையில், சோமாலியா நாட்டில் கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அமைதுள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் அறிவித்துள்ளது. ‘வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை தளத்தின் மீது வெடிக்கச் செய்து பின்னர் உள்ளே புகுந்து சண்டையிட்டு ராணுவ தளத்தை எங்களது வசமாக்கி விட்டோம்’ என அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சில வீரர்கள் வன பகுதிக்குள் தப்பி சென்றதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.