என் மலர்
நீங்கள் தேடியது "ஷரியத்"
ஷரியத் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #SakshiMaharaj #Shariat
லக்னோ:
தனது சர்ச்சை கருத்துக்களால் மிகவும் பிரசித்தி பெற்ற பா.ஜ.க தலைவர்களுள் ஒருவர் சாக்ஷி மகாராஜ். இவர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ஷரியத் நீதிமன்றங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தனது வழக்கமான பாணியில் பதிலளித்த சாக்ஷி மகாராஜ், ஷரியத் வேண்டும் என்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
மேலும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, மிகவும் பலமானதாக இருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இங்கு வாழ தகுதி அற்றவர்கள் எனவும், அவர்களை மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு வழியனுப்பி வைக்கிறோம் எனவும் சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். #SakshiMaharaj #Shariat