என் மலர்
நீங்கள் தேடியது "ராஜேஷ்.எம்"
சீமராஜா படத்தை முடித்து அடுத்த படத்தில் பிசியாகி இருக்கும் சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Sivakarthikeyan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் சீமராஜா படம் வருகிற செப்டம்பரில் ரிலீசாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
One more pic from the photo shoot😊👍 pic.twitter.com/rv6DENaLYH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 19, 2018
ரவிக்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிப்பதால், அந்த படத்திற்காக எடுக்கப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். #Sivakarthikeyan