என் மலர்
நீங்கள் தேடியது "துருவ்"
விக்ரம் மகன் துருவ் விக்ரமை இயக்க, விருது இயக்குனர் பாலாவை தொடர்ந்து மற்றொரு விருது இயக்குனரும் அவரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #DhruvVikram
தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடனத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் துருவ் ஒப்பந்தமாகியுள்ளார். 22 வயதான துருவ் விக்ரமின் தோற்றம் இந்தப் படத்துக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாலேயே அவரைத் தேர்வு செய்ததாகப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நிகில், வருண் சந்தேஷ், ராணா டகுபதி, சாய் பல்லவி இணைய உள்ளதாகத் தெலுங்குத் திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வர்மா படத்தின் இயக்குநரான பாலா மற்றும் கம்முலா இருவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலா இயக்கத்தில் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகும் `வர்மா' படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்க பெங்கால் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Varma #DhruvVikram
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார்.
பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், துருவ் ஜோடியாக நடிக்க வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக ஷ்ரியா சர்மா, சுப்புலெட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில் துருவ் ஜோடியாகி இருக்கிறார் மேகா.

`வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு `குக்கு', `ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதுகிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram