என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 196299
நீங்கள் தேடியது "விஎச்பி"
ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக, வி.எச்.பி இளைஞரணியினர் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். #SwamiAgnivesh
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் சென்று இருந்தார். இன்று காலை தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அவர் வெளியே வந்த போது அங்கு கூடியிருந்த, பா.ஜ.க இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர் அவரை தாக்கினர்
சுவாமி அக்னிவேஷ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் சுவாமி அக்னிவேசுக்கு தொடர்புள்ளது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
மாட்டிறைச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் அவர் சனாதன் தர்மத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் வலதுசாரி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அக்னிவேஷ் அரியானா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவர் அரசியலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார்.
மேலும், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொஹாடியா தொடங்கியுள்ள புதிய அமைப்பு அறிவித்துள்ளது.
லக்னோ:
விஷ்ய இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த பிரவீன் தொஹாடியா சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகியதோடு, குஜராத் அரசு தன்னை கொலை செய்ய பார்க்கிறது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனை அடுத்து, ஹிந்து ஹி ஆகே என்ற புதிய அமைப்பை தொஹாடியா தொடங்கினார்.
இந்நிலையில், இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த் பராஷர் நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சல்மான்கான் தயாரிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது.
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாக கூறி சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும், மாநில அரசுகள் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X