என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 196366
நீங்கள் தேடியது "பிரெக்சிட்"
பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு பல எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் மசோதா சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #Brexit #TheresaMay
லண்டன்:
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக விலகி விடும் என்பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய யூனியனுடன் நடத்தப்பட்டு வருகிறது.
பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.
டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா, “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்சிட் ஒருபோதும் நிறைவேறாது”என எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறாக, சொந்த கட்சியிலேயே எதிர்ப்பும் ஆதரவும் கலந்து இருந்த நிலையில், பிரெக்ஸிட் விவகாரத்தில் தொடர்புடைய வர்த்தக மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழ்சபையில் பிரதமர் தெரசா மே நேற்று தாக்கல் செய்தார். 318 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் 285 பேர் மசோதாவை எதிர்த்தும் வாக்களித்தனர்.
கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, மேல் சபையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X