என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை"
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில் 80 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #ITRaid #SPK
சென்னை:

சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் இந்த சோதனையின்போது ரூ.80 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சோதனை நடப்பதால், சோதனை நிறைவுற்ற பிறகே, முழு விவரமும் வெளியாகும்.
முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக பல்வேறு இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. #ITRaid #SPK
தமிழகத்தில் சாலைப்பணிகள் உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை ஆராய்ந்த அதிகாரிகள் இன்று சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.