என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடியாலா சிறை"

    • இம்ரான்கான் 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறையில் அவரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சமீப காலமாக இம்ரான்கானைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறையில் இம்ரான்கானைச் சந்திக்க அவரது சகோதரிகளான அலீமா கான், உஸ்மா கான், நொரீன் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் நேற்று வந்தனர். ஆனால் போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து சாலை குறுக்கே கன்டெய்னர்களை போட்டு மறித்தனர். அவர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்தனர். இருப்பினும், இம்ரான்கானின் சகோதரிகள் அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சகோதரிகள் 3 பேர் மற்றும் இம்ரான்கான் கட்சி தலைவர்கள் சிலரையும் கைது செய்தனர். பின்னர் வாகனத்தில் ஏற்றி சிறையில் இருந்து சற்று தொலைவான பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

    ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமையும் இம்ரான்கானைச் சந்திக்க வந்தபோது, அவரது 3 சகோதரிகளும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்புக்கு எதிரான மற்ற ஊழல் வழக்குகளை அவர் அடைக்கப்பட்டுள்ள அடியாலா சிறைக்குள் வைத்தே விசாரிக்க அந்நாட்டின் பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. #NawasSharif #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக 3 வழக்குகள் தொடரப்பட்டன. அதில் அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷரிப் அவரது மகள் மரியம் நவாஸ், மற்றும் மருமகன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு லண்டனில இருந்து பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷரிப் மற்றும் மரியம்  நவாஸ் ஆகியோர் லாகூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.



    நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் அடியாலா சிறையில் ‘பி’ வகுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நவாஸ் ஷரிப் மீது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை சிறைக்குள் வைத்தே விசாரிக்க பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

    இந்நிலையில், அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷரிப், மரியம் நவாஸ் மற்றும் மருமகன் சப்தார் ஆகியோருக்கு  வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து திங்களன்று மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது வழக்கறிஞர் கவாஜா ஹாரிஸ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #NawasSharif #Pakistan
    பனாமா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். #NawazSharif #MaryamSharif
    இஸ்லாமாபாத்:

    பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, லண்டனில் இருந்து திரும்பி வந்த நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை நேற்று இரவு லாகூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

    நவாஸ் ஷரீப் வருகையை அறிந்த அவரது கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் 50-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை ராவல்பிண்டிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை அங்குள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். #NawazSharif #MaryamSharif
    ×