என் மலர்
நீங்கள் தேடியது "ஓர்பால் ஈர்ப்பு"
ஓர்பால் ஈர்ப்பு சட்டவிரோதம் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Section377
புதுடெல்லி:
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377ன் படி, இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியதாகும். இந்த குற்றத்துக்கு, ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்க தற்போதுள்ள சட்ட வழிவகை செய்கிறது. இந்நிலையில் கடந்த 2009ம் தேதி, இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி, இயற்கைக்கு மாறான உறவு சட்டவிரோதமல்ல என உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து 2013ம் தேதி இந்த உத்தரவுக்கு தடை விதித்த சுப்ரீம் கோர்ட் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்டவிரோதம்" என தீர்ப்பளித்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், ஓரின சேர்க்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்யும் படியும், 377 சட்டப்பிரிவை நீக்கும் படியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசு மேலும் அவகாசம் கோரியது. இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.