என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னா"

    உத்தர பிரதேச மாநிலத்தில் மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி, சிறைச்சாலை வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GangsterShotDead
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி கைது செய்யப்பட்டு ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    இந்நிலையில், மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜான்சி சிறைச்சாலையில் இருந்து சனிக்கிழமை பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அங்கிருந்து இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்தனர். அவரை ஏற்றி செல்வதற்காக சிறை வளாகத்தில் போலீஸ் வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு ரவுடியான சுனில் ரதி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முன்னாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் முன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. கொலையாளி கைது செய்யப்பட்டான். பலத்த பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலைக்குள் உள்ள கைதிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முன்னா ஆதரித்ததால், அவரை போலீசார் என்கவுண்டரில் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியிருப்பதாக அவரது மனைவி ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #GangsterMunnaBajrangi #GangsterShotDead
    ×