என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாதா"

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
    • பணம் வாங்கிகொண்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர் சங்கத்தில் யோகிபாபு மீது தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் புகார் அளித்துள்ளார்.

    'தாதா' என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் யோகிபாபு, நிதின் சத்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக காயத்ரி மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கி உள்ளார். தாதா படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்று யோகிபாபு சமீபத்தில் மறுப்பு வெளியிட்டார்.

    யோகிபாபு

    யோகிபாபு

     

    இதுகுறித்து தாதா படத்தின் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் பட விழாவில் பேசும்போது, ''யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? தாதா படத்தை வாங்காதீர்கள் என்று பலருக்கு போன் செய்து தடுக்கிறார். எனக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக பணம் வாங்கி கொண்டு நடிக்கவும் முன்வரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. எனக்கு படம் நடித்துக் கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

    வங்கப்புலி, தாதா என செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று தனது 47வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். #HappyBirthdayDada
    கொல்கத்தா :

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்த நாள் இன்று... இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனான கங்குலி, கேப்டன் என்பதையும் தாண்டி, இந்திய அணியின் காட்ஃபாதராய் விளங்கியவர்.

    ஓய்வுபெற்று 8 ஆண்டுகளாகியும், இந்தியாவில் கிரிக்கெட் மட்டைகள் சுழலும் இடங்களிலெல்லாம் ‘தாதா என்ற கோஷம் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு ஆடுகளத்தில் ஆக்ரோஷத்தை கற்றுக்கொடுத்த அவருக்கு பல்வேறு பிரபலங்களும் முன்னாள் இன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும்இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரான விரேந்திர சேவாக் அவருக்கே உரிய பாணியில், கங்குலி பேட்டிங் செய்யும் புகைப்படம், கங்குலி அடித்த பந்து பார்வையாளர் மீது பட்டு அவர் தலையில் ரத்தம் வரும் புகைப்படம், பந்துவீசும்போது காற்றில் கலைந்த முடியுடன் இருக்கும் கங்குல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டை கழட்டி சுழற்றிய புகைப்படம் உள்பட நான்கு படங்களை ட்விட்டரில் பதிவிட்டு கங்குலிக்கு வித்தியாசமாக 4 படிகளில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    படி 1: எழுந்திரு, கண்களை இருமுறை சிமிட்டி களத்தில் இறங்கி ஆடு.
    படி 2: பந்துவீச்சாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அடித்து நொறுக்கிடு. (வன்முறையை குறிப்பிடவில்லை)
    படி 3: உன் பேட் மட்டும் சுழலவில்லை உத்வேகத்தோட்டு நீ பந்து வீசும் போது உன் தலைமுடியும் சுழலும்.
    படி 4: யாருமே பார்க்கவில்லை என்பது போல் வெற்றியை கொண்டாடு.

    இவ்வாறு சேவாக் பதிவிட்டுள்ளார். #HappyBirthdayDada
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.10 லட்சம் கேட்டு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் மிரட்டும் தாதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹ்ர் மாவட்டத்துக்குட்பட்ட டேபாய் சட்டசபை தொகுதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பவர், டாக்டர் அனிதா லோதி ராஜ்புத்.

    சமீபத்தில் இவருக்கு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி (மெசேஜ்) வந்தது. இன்னும் மூன்று நாட்களுக்குள் எனக்கு பத்து லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தாரையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    துபாயில் வாழும் அலி புதேஷ் பாய் என்னும் பிரபல தாதா அனுப்பிய இந்த மிரட்டல் தொடர்பாக தான் வசிக்கும் காசியாபாத் மற்றும் புலந்த்ஷஹ்ர் காவல் நிலையங்களில் டாக்டர் அனிதா லோதி ராஜ்புத் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
    ×