என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 200618
நீங்கள் தேடியது "மிஸ்டர்.சந்திரமெளலி"
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் விமர்சனம். #MrChandramouli #Gauthamkarthik #Karthik
அப்பா, மகன் என கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார், ரேடியோ என பழமையான பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக கார்த்திக்கும், நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப பாக்ஸராக கவுதம் கார்த்திக்கும் வருகின்றனர்.
ஒருநாள் தனது பத்மினி காரில் வெளியே செல்லும் கார்த்திக் ரெஜினா மீது மோதி விடுகிறார். இதையடுத்து தனது வண்டியை சரிசெய்து கொடுக்கச் சொல்லி கார்த்திக்கின் காரை ரெஜினா எடுத்துச் செல்கிறார். இதையடுத்து அந்த வண்டியை சரிசெய்து ரெஜினாவை திட்டுவதற்காக கவுதம் கார்த்திக் அவளது அலுவலகத்திற்கு செல்கிறார். ரெஜினாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வலையில் சிக்குகிறார். உடனடியாகவே தனது காதலையும் ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது.
இதுஒருபுறம் இருக்க, கால்டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் மகேந்திரன். சிறந்த சேவை வழங்குவதாக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் அந்த விருதை தான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சந்தோஷ் பிரதாப். ஆனால் அவரது கால்டாக்சியில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார்.
இந்த நிலையில், மகேந்திரனின் ஸ்பான்சர்ஷிப் மூலம் கவுதம் கார்த்திக் பெங்களூ சென்று பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார். வெற்றி களிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்கின்றனர்.
அப்போது, அவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். கவுதம் கார்த்திக்குக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு அறுந்து, பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிர்ச்சியளிக்கும்படியான போஸ்ட் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது.
அது என்ன போஸ்ட்? வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் உயிரிழப்பு இயற்கையானதா? வரட்சுமிக்கும், கார்த்திக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல் காட்சிகளில் துறுதுறுவெனவும், அப்பாவை இழந்து தவிக்கும் காட்சியில் கவர்ந்தும் ரசிக்க வைத்திருக்கிறார். ரெஜினா தைரியமான பெண்ணாக வந்து கவர்கிறார். ஏதேதோ ஆனேனே பாடலில் ஓரளவுக்கு கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டியிருக்கிறார்.
கார்த்திக்குக்கு தீனி போடும் கதாபாத்திரமாக, இது அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார்.
கார்த்திக்குக்கு சமமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி ஸ்கோர் செய்திருக்கிறார். வரலட்சுமி தனது கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்புடன் மெருகேற்றியிருக்கிறார்.
இந்த படத்தை பொறுத்தவரை சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் அவர் அடிக்கும் கவுண்டரும் பெரிதாக எடுபடவில்லை. காமெடி இருக்கும் என நினைத்து போனால் ஏமாற்றம் தான்.
இயக்குநர் திருவை பொறுத்தவரையில், மாறுபட்ட கதையின் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் மனோநிலை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. சிரிப்பு, காதல், சண்டை, சோகம் என மாறுபட்ட உணர்ச்சிகள் இல்லாமல் கதை எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது.
சாம்.சி.எஸ். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `மிஸ்டர்.சந்திரமௌலி' வலுவில்லை.
#MrChandramouli #Gauthamkarthik #Karthik
மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் கார்த்திக் மனம் திறந்து பேசினார். #MrChandramouli #Karthik
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...
நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்திலும் வாழ்ந்து இருக்கிறோம். 8 வயதிலேயே என்னை பிரிந்துவிட்டார். இப்போதுதான் நாங்கள் நெருக்கமாக பேசிக்கொள்கிறோம். கவுதம் நடிப்பதை ரசிக்க தொடங்கி விட்டேன்.
இல்லை. அதில் அப்பா மகன் உறவே இல்லை. அது முற்றிலும் வித்தியாசமானது.
மகன் காதல் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பொறாமை இல்லையே?
இல்லவே இல்லை. நான் நடிக்கும் போது இப்படி எல்லாம் இல்லையே... மகன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். பொறாமை எல்லாம் இல்லை.
உங்கள் குரலை மிமிக்கிரி பண்ணுபவர்கள் பற்றி?
நான் நன்றாக தானே பேசுகிறேன். நான் நடிக்கும்போது இப்போது இருப்பது போல டிராக் வைத்து டப்பிங் பேச முடியாது. ஒருமுறை தவறு செய்தால் முழுமையாக பேசவேண்டும். அப்படி டப்பிங் பேசி பேசித் தான் என் குரல் அப்படி ஆனது. சிலர் என் குரலை மிமிக்கிரி செய்யும்போது அப்படியா இருக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நீங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக இயக்குனர் கூறினாரே?
நான் 2002 க்கு முன்பு அப்படி இருந்ததில்லை. 2002க்கு பின் சில படங்களில் அப்படி ஆனது. நான் அப்படி இருந்திருந்தால் இத்தனை படங்களில் நடித்திருக்க முடியுமா? சிலர் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். 32, 34 வயதில் திருமணம் செய்வார் என நினைக்கிறேன். நாளைக்கே ஒரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்துகொள்வதாக கூறினாலும் நான் சம்மதிக்க தயாராக இருக்கிறேன்.
கவுதம் பற்றி அதிகம் கிசுகிசுக்கள் வரவில்லையே?
அந்த அளவுக்கு சாமர்த்தியமாக இருக்கிறார் போல. #MrChandramouli #Karthik
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ், படக்குழுவை கலாய்த்து அரங்கத்தை சிரப்பலையால் நனைய வைத்தார். #MrChandramouli #GauthamKarthik
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கவுதம் ஜோடியாக ரெஜினாவும், முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர் சதீஷ் பேசியதாவது,
`திரு பேசும் கவுதம் கார்த்திக் இதுவரை நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். ஆனால் முந்தைய படங்களில் எல்லாம் கவுதம் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மஹாதேவகி என அவர் ரியாலாகவே நடித்திருந்தார். கவுதமுக்கு இது எல்லாம் ஈசி. ஆனால் இந்த படத்தில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பாக்ஸிங்குக்காக உடற்பயிற்சி செய்து கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் 2 ஹீரோயின்கள் இருந்தும், அவர் தான் அழகாக இருப்பார்.
படப்பிடிப்பில் கார்த்திக் சாரை பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அவரிடம் முத்தம் வாங்க நாங்க தினமும் காத்திருப்போம். டார்லிங் என கூப்பிட்டு அவர் கொடுக்கும் முத்தம் தான் எங்களுக்கு உத்வேகம். இது எங்களுக்கு கிடைத்த பெருமை' என்றார். #MrChandramouli #GauthamKarthik
திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #MrChandramouli
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் ஜூலை 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிச்சர்டு எம்.நாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #MrChandramouli #ReginaCassandra
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X