என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் நகை மோசடி"

    வில்லியனூரில் திருமணம் செய்வதாக பெண்ணிடம் நகை மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கணுவாப் பேட்டை புதுநகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கவிதா (வயது 24). இவருடன் அரியாங்குப்பம் அருகே தமிழக பகுதியான சின்ன இரிசாம் பாளையத்தை சேர்ந்த பலராமன் மகன் அய்யனாரப்பன் (27) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

    அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி கவிதாவிடம் இருந்து சிறுக, சிறுக 18 பவுன் நகையை அய்யனாரப்பன் வாங்கி சென்றார்.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு அய்யனாரப்பனிடம் கவிதா வற்புறுத்திய போது, அய்யனாரப்பன் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து நகையை திருப்பி கேட்டபோது, கவிதாவை கொலை செய்து விடுவதாக அய்யனாரப்பன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கவிதா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் விசாரணை நடத்தி அய்யனாரப்பன் மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

    ×