என் மலர்
நீங்கள் தேடியது "வேணுகோபால ராவ்"
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் ஆந்திராவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வேணுகோபால ராவ் இன்று இணைந்துள்ளார்.
அமராவதி:
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள பவன் கல்யாண் ‘ஜனசேனா’ என்ற கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். படங்களில் கவனம் செலுத்தி வருவதால் கட்சி பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால், கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பவன் கல்யாண் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களை தனது கட்சியில் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வேணுகோபால ராவ் இன்று ஜனசக்தி கட்சியில் தன்னை இணைத்துள்ளார்.
2005-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடர்களிலும் பல்வேறு அணி சார்பில் அவர் களமிறங்கியுள்ளார்.