என் மலர்
நீங்கள் தேடியது "பழைய தோட்டாக்கள் கைப்பற்றல்"
ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிய மீனவர் வீட்டில், பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன். இன்று பிற்பகலில் தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட அவர் குழி தோண்டியுள்ளார். 5 அடி தோண்டியதும் பெட்டி பெட்டியாக பழைய தோட்டாக்கள் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, போலீசாருக்கு எடிசன் தகவல் கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் அங்கு வந்து குழியை மேலும் தோண்டி பழைய தோட்டாக்களை கைப்பற்றினர். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.