என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 205863
நீங்கள் தேடியது "எம்.ஐ.டி"
மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் இணைந்து, மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளன.
மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்.ஐ.டி.) கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் மக்கள் ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின்னலை மற்றும் கை அசைவுகளை கொண்டு ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். முந்தைய ஆய்வுகளில் ரோபோட்களை மிக எளிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்க முடிந்தது.
இந்நிலையில், புதிய அப்டேட் கொண்டு ரோபோட்களால் மேலும் பல்வேறு பணிகளை செய்து முடிக்க முடியும், இதனால் ரோபோட்களை குழுவாகவும் இயக்க முடியும்.
புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எம்.ஐ.டி.-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோபோட் நடவடிக்கைகளில் பிழையை மனிதன் கண்டறிந்தால் ரோபோட் குறிப்பிட்ட பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மனிதரின் உதவியை கேட்கும்.
கை அசைவுகளை கொண்டு ரோபோட்டில் இருக்கும் ஆப்ஷன்களை ஸ்கிரால் செய்து, ரோபோட் செய்யும் பிழையை திருத்த முடியும். என எம்.ஐ.டி. வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிநவீன திட்டத்தை உருவாக்க, எம்.ஐ.டி. குழுவினர் மூளையின் நடவடிக்கையை கண்டறிய எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி-யையும் (electroencephalography - EEG) உடல் தசை அசைவுகளை கண்டறிந்து கொள்ள எலெக்ட்ரோ-மியோகிராஃபியை (electromyography - EMG) பயன்படுத்தியுள்ளனர். இரண்டு தொழில்நுட்பங்களும் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும், இவை இரண்டும் இணையும் போது புதிதாய் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான வழிமுறையாக இருக்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக எலெக்ட்ரோ-மியோகிராஃபியை பயன்படுத்தும் போது இருந்ததை விட எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி மற்றும் எலெக்ட்ரோ-மியோகிராஃபியை இணைக்கும் போது மனிதன் மற்றும் ரோபோட்களிடையே மிக இயற்கையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். உடல் தசை அசைவுகளை புரிந்து கொள்ளக்கூடிய அம்சம் மூலம் ஜெஸ்ட்யூர்களை கொண்டு ரோபோட்களிடம் முன்பை விட சிறப்பாக பணியை செய்ய வைக்க முடியும். என எம்.ஐ.டி. கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் டேனியல் ரஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த தொழில்நுட்பம் மக்கள் பொதுவாக நினைக்கும் தகவல்களை புரிந்து கொள்ளாமல் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த இயந்திரம், ஒருவருக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும் என இந்த திட்டத்தில் பணியாற்றிய ஜோசப் டெல்பிரெடோ தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X