என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்டண்ட் சிவா"
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோலிசோடா-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா, இந்த படத்தின் மூலமாக நடிகனாகும் ஆசை நிறைவேறிவிட்டதாக கூறியிருக்கிறார். #GoliSoda2 #StuntSiva
விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கோலிசோடா-2.
இந்த படத்தில் சாதி சங்க தலைவராக நடித்து இருந்தவர் ஸ்டண்ட் சிவா. படத்தில் நடித்தது பற்றி சிவா கூறும்போது ‘சண்டை பயிற்சியாளராக காதலுக்கு மரியாதை தான் முதல் படம். சேது, நந்தா, பிதாமகன் உட்பட பல படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறேன். என் படங்களில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும்.

வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் ஹாசனின் கண்ணை கேட்கும் கதாபாத்திரம் தான் நடிகராக முதல் படம். தொடர்ந்து சில படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நடிப்பதற்காக தான் சினிமாவுக்குள் வந்தேன். அது நிறைவேறி இருப்பதோடு பாராட்டுகளும் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். இவரது மகன்கள் இருவரும் கராத்தே சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #GoliSoda2 #StuntSiva