search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஹ்மான்"

    • 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிம்பு மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

    இசைவெளியீட்டு விழாவில் சிம்பு "கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் படத்துல் வேலை செய்றது ரொம்ப அதிர்ஷடமா நான் பாக்குறேன், நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.

    பின் ரசிகர்களிடம் "மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்" என்று கூறினார்.

    பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

    நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை, அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்', என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
    • 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 'இந்தியன் 2'படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை 6 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.

    இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், நடிகர் சிம்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.

     

    'இந்தியன் 2' படத்தில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் என மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடலான கம் பேக் இந்தியன் என்ற பாடலை அனிருத் லைவாக பாடினார்.

    அனிருத் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை பாராட்டி பேசினார் " ஷங்கர் சார் ஸ்டைல சொல்லனும்னா சிக்ஸ்க்கு அப்பறம் செவென் டா.... ரஹ்மான் சார்க்கு அப்பறம் எவன் டா" என்று கூறினார்.

    சிம்பு விழாவில் " சிம்பு லேட்டா வந்துடாரு அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா நான் மணி சாரோட தக் லைஃப் படத்தோட ஷூட்டிங்ல இருந்துதான் வரேன்" என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு 'துருவங்கள் 16' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. #ARRahmanbiography
    புதுடெல்லி:

    ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

    ‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார். 

    இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய பெரு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

    இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

    பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ’நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

    விளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதுவரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

    பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.

    ’இத்தனை ஆண்டுகளாக இசையின் மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் யார்? எங்கே சென்று கொண்டிருக்கிறேன்? என்பதை நீங்கள் வாசிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என தனது முன்னுரையில் ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.  #ARRahmanbiography #Penguinpublishers
    ×