என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியேட்டர்கள்"

    • நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது.
    • திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த டிசம்பர் மாதம் அதிகாலை நேரம் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அங்கு ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த அல்லு அர்ஜூனை பார்க்க பெருமளவு கூட்டம் கூடியது.

    இதில் ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வந்திருந்த 8 வயது மகன் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அல்லு அர்ஜூன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


    இதைத்தொடர்ந்து திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தொடர்பாக தெலுங்கானா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நேற்று முன்தினம் நீதிபதி விஜய்சென் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ''16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ இரவு, அதிகாலை காட்சிகளில் தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது'' என தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் உத்தரவிட்டார்.

    மேலும் குழந்தைகள் திரையரங்குகளில் நுழைவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா மாநில அரசை ஐகோர்ட்டு கேட்டுக்கொண்டது. இந்த நேரங்களில் குழந்தைகள் திரைப்படங்களை பார்ப்பதற்கான விதிகளை உருவாக்க குழந்தை உளவியலாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களை கலந்தாலோசிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. "இந்த உத்தரவு இப்போது அமலுக்கு வந்துள்ளது. பொழுதுபோக்கு துறையின் தேவைகளை சமநிலைப்படுத்தும் அதே வேளையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் விரைவில் உருவாக்கும்" என கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. #Theatre #Kaala
    சென்னை:

    பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7-ந்தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கிறது. படத்திற்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    இந்நிலையில், காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். #Theatre #Kaala
    ×