என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடைமழை"

    வங்கதேசத்தில் பெய்து வரும் அடை மழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். #BangladeshRain
    டாக்கா:

    வங்கதேசத்தில் இந்த ஆண்டின் முதல் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ரோகிங்கியா அகதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோகிங்கியா அகதிகள் வசிக்கும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அகதிகளின் கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.



    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக  அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ரங்கமதி மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  #BangladeshRain
    ×