என் மலர்
நீங்கள் தேடியது "ஊடுருவல் முயற்சி"
ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். #militantsgunneddown
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் அத்துமீறி நடந்துகொண்டு இருக்கிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஊடுருவலை தடுக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிசூட்டில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் 6 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், எத்தனை பேர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்பது குறித்தும், அங்கிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள் குறித்தும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #militantsgunneddown

ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்துள்ளனர். #KashmirInfiltrationBid #BSF
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜம்மு பிராந்தியம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. அதேசமயம் ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இன்று பயங்கரவாதிகள் ஒரு குழுவாக ஊடுருவ முயன்றனர். போபியான் பகுதியில் அவர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர்முனையில் இருந்து பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர்.

பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KashmirInfiltrationBid #BSF

சிறிது நேரம் இந்த சண்டை நீடித்த நிலையில், பயங்கரவாதிகள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர். இதன்மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் சர்வதேச எல்லையில் நடந்த 4-வது ஊடுருவல் முயற்சி இது ஆகும்.