என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத் பாடப்புத்தகம்"
ராமாயணத்தில் சீதையை ராமர் கடத்தியதாகவும், லட்சுமணன் ராமருக்கு உபதேசம் செய்ததாகவும் குஜராத் பாடப்புத்தகத்தில் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. #Ramayana #Gujarat #SchoolBook
ஆமதாபாத்:
குஜராத் மாநிலத்தில், ஆங்கில வழியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்து வருகிறார்கள்.
பிளஸ்-2 சமஸ்கிருத பாட புத்தகத்தில் ‘சமஸ்கிருதமும், இலக்கியமும்’ என்கிற பாடம் வருகிறது. இதில் ராமாயணம் பற்றிய தொடக்க உரை இடம் பெற்றிருக்கிறது.
அதில் சீதையை ராமர் கடத்தியதாகவும், லட்சுமணன் ராமருக்கு உபதேசம் செய்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனை படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி மாநில அரசின் பாடநூல் நிறுவன செயல் தலைவர் நிதின் பெதானி விளக்கம் அளிக்கையில் “மொழி பெயர்ப்பின் போது கவனக்குறைவின் காரணமாக ஏற்பட்ட பிழை இது. ‘கைவிடப்பட்ட’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் ‘கடத்தப்பட்ட’ என தவறாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. இந்த பாடத்தை பயிற்றுவிக்கும் போது, குறிப்பிட்ட அந்த வார்த்தையை திருத்தி பயிற்றுவிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது” என்றார்.
இருப்பினும் ஒரு வார்த்தையை மாற்றியதால் ராமாயணத்தின் அடிப்படையே தவறாகி விட்டதாக ஆன்மிகவாதிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். #Ramayana #Gujarat #SchoolBook