என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்தரா"

    டெல்லி விமான நிலையத்தில் விமான பயணிகளின் ஆவணங்களை சரிபார்க்க அடுத்த மாதம் ரோபோட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக விஸ்தரா நிறுவனம் தெரிவித்துள்ளது. #RADA #Vistara
    புதுடெல்லி:

    இந்திய விமான நிலையங்களில் பயணிகளின் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களை சரிசெய்ய தனித்தனி அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் சோதனை செய்த பின்னரே விமானத்தில் பயண செய்யமுடியும். இந்நிலையில், பயணிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையங்களில் ரோபோட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தரா இந்த ரோபோட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளன. ராடா என பெயரிடப்பட்ட இந்த ரோபோட்டுகள், பயணிகளின் ஆவணங்களை சரிசெய்து விட்டு அவர்கள் செல்ல வேண்டிய புறப்பாடு நுழைவு வாயில், சேரும் இடத்தின் வானிலை நிலவரம் மற்றும் விமான நேரம் போன்ற தகவல்களை அளிக்கும்.

    இந்த ரோபோட்டுகளின் கைகள் மட்டும் அசையும். அவை பயணிகளுடன் உரையாடும். குழந்தைகளுடன் விளையாடி அவர்களுக்கு பிடித்த பாடல் மற்றும் வீடியோக்களை இசைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் நகர்ந்து செல்லும் வகையில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 360 டிகிரி கோணத்தில் சுழலும். அதில் உள்ள 3 கேமிராக்கள் மூலம் உரையாடுகிறது.

    இந்த ரோபோட்டுகள் டெல்லி விமானநிலையத்தில் டெர்மினல் 3-ல் வருகின்ற ஜுலை மாதம் 5-ம் தேதி வைக்கப்பட உள்ளது. தொடக்கத்தில் சில சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்டுகள் விரைவில் பல பணிகளை செய்யும் திறன் கொண்டதாக உருவாக்கப்படும் என விஸ்தரா நிறுவனம் தெரிவித்துள்ளது. #RADA #Vistara

    ×