search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரக்காண்ட்"

    • சாஸ்திரா நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
    • சாஸ்திரா நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே சிக்கிக்கொண்டனர்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் கர்வால் பகுதியில் உள்ளது. இங்கு மலையேற்றத்தை விரும்பும் டிரக்கர்கள் பயணிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 டிரக்கர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    நேற்று  சாஸ்திரா தல் நதிக்கு சென்றுகொண்டிருந்த 22 டிரக்கர்கள் மோசமான வானிலையில் வழியிலேயே தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் செல்வதற்கு வழி இல்லாததால் மீட்டுப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

    சிக்கிய 22 பேரில் 18 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். மற்ற மூவர் உள்ளூர் வழிகாட்டிகள் ஆவர். இந்நிலையில் காட்டு இலாகா அதிகாரிகளுடன் நேற்று முதல் மாநில மீட்புப்படையினர் நடத்திவந்த தேடுதலில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

     

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிலில் முஸ்லிம் வாலிபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய கும்பலிடமிருந்து போலீஸ் அதிகாரி தைரியமாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GagandeepSingh
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் ஜிரிஜியா கிராமத்தில் உள்ள கோவிலில் முஸ்லிம் வாலிபர் ஒருவர், இந்து பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினைச் சேர்ந்த கும்பல் இளைஞரை தாக்க தொடங்கினர். அதனை தடுக்க முயன்ற பெண்ணிடம், ஒரு இந்து பெண்ணாக இருந்து கொண்டு முஸ்லிம் வாலிபருடன் பழகிக்கொண்டிருக்கிறார் என அந்த கும்பல் கூறியுள்ளது.

    அப்போது கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கன்தீப் சிங் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் அந்த கும்பலிடம் இருந்து இளைஞரை காப்பாற்றி, அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் சிலர் வாலிபரை மீண்டும் தாக்கினார். இதனால் கங்கன்தீப் வாலிபரை கட்டியணைத்து, அவருக்கு பதிலாக அடியை வாங்கிக்கொண்டார். பின்னர் வாலிபரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றார்.

    இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கும்பலை பார்த்து பயப்படாமல் தைரியமாக வாலிபரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. #GagandeepSingh
    உத்தரக்காண்ட் மாநிலத்தில் தரமற்ற மதிய உணவு குறித்து புகார் அளித்த 11 வயது சிறுவனை இரும்புக்கம்பியால் அடித்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #DehradunBoy
    டேராடூன்:

    உத்தரக்காண்ட் மாநிலம் டேராடூன்  மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ராகுல் என்ற சிறுவன் 5-ம் வகுப்பு பயின்று வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளியில் அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. மதிய உணவின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதனால் ராகுல் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை நஷ்ரின் பனோவிடம் புகார் அளித்தார்.

    ராகுல் மீது கோபபட்ட நஷ்ரின் அவரை இரும்புக்கம்பியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராகுல் மயங்கி விழுந்தார். அவரை சக மாணவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். ராகுலை அவன் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, ராகுலின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் நஷ்ரினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். #DehradunBoy
    ×