search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மவுனம்"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. #ThoothukudiShooting #Modi #AbhishekManuSinghvi
    புதுடெல்லி :

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக டெல்லியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-



    எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக ட்விட்டரில் கருத்து பதிவிடும் மோடி, தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியான விவகாரத்தில் மவுனம் சாதித்து வருவதற்கான காரணத்தை மக்களிடம் விளக்கி கூற வேண்டும். 13 பேர் பலியான சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய உயரதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படாமல், அவர்கள் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் அதன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எந்த கால வரையறையும் அரசு நிர்ணயம் செய்யவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மிருகத்தனமான செயல். விசாரணையானது சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. இதன் பின்னணியில் உள்ள அனைவரையும் தண்டிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் துப்பாக்கி சூடு விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting  #Modi  #AbhishekManuSinghvi
    ×