என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தோஷ்.பி.ஜெயக்குமார்"

    சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் படத்தில் நடித்து வரும் ஆர்யா, ஏ சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். #Arya #Ghajinikanth
    ஆர்யா கையில் கஜினிகாந்த், சந்தனதேவன் இரண்டு படங்கள் தான் இருக்கின்றன. ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிகழ்ச்சி முடிவில் தான் யாரையும் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.

    இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டிவிக்கு வந்தது பற்றி ஆர்யா கூறும்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன்.



    நீங்கள் டிவியில் பார்த்தது குறைவுதான். கேமராவுக்கு பின்பு நடந்த நிறைய சம்பவங்கள் என்னை அப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் இயக்கத்தில் நடிப்பதால் அடல்ட் படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். ஏ சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிக்கவும் மாட்டேன். இரும்புத்திரையில் அர்ஜுன் செய்த அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நான் மறுத்தேன். அர்ஜுன் பேசிய வசனங்களை நான் பேசி இருந்தால் மக்கள் சிரித்து இருப்பார்கள்’. #Arya #Ghajinikanth

    ×