என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாகர்"

    சோமாலியாவில் இன்று மதியம் கரையை கடக்கும் ‘சாகர்’ புயலின் தாக்கத்தால் கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar #RailfallWarningKerala
    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் தென் மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் ஒன்று உருவாகி உள்ளதாகவும், அதற்கு சாகர் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தற்போது மேற்கு திசையிலிருந்து தென்மேற்கு திசையை நோக்கி நகர துவங்கியுள்ளது.

    அரபிக்கடலின் தென் மேற்கு திசையை நோக்கி நகரும் சாகர் புயலால், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் பலத்த மழையும், சூறைகாற்றும் வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘சாகர் புயல்’ சோமாலியா நாட்டின் கடற்பகுதியில் கரையை கடக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சாகர் புயல் காரணமாக தமிழகம், கேரளா, கோவா, மஹாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Sagar #RailfallWarningKerala
    ×