என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோக்"

    கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதில் நிலவிவரும் அரசியல் நிலவரம் தொடர்பாக நீதிபதி தெரிவித்த கருத்தால் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சிரிப்பலை எழுந்தது. #KarnatakaCMrace #SCjudgewittyjoke
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநில சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் எடியூரப்பா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, பல எம்.எல்.ஏ.க்கள் வெகு தூரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு நகருக்கு வர வேண்டியுள்ளதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சில நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

    அப்போது, சமூகவலைத்தளத்தில் கண்ட ஒரு பதிவை குறிப்பிட்ட நீதிபதி ஏ.கே. சிக்ரி, ‘தன்னிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் (காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆதரவு உள்ளதாக கர்நாடக கவர்னருக்கு பிரபல விடுதி (ரிஸார்ட்) உரிமையாளர் கடிதம் எழுதி இருப்பதாக தெரியவந்துள்ளது என வேடிக்கையாக குறிப்பிட்டார்.

    காரசாரமான விவாதங்களுடன் முக்கியமான தீர்ப்பை எதிர்பார்த்து நீதிமன்றத்தில் குழுமி இருந்த அனைவரும் நீதிபதியின் இந்த கருத்தை கேட்டு மனம் விட்டு சிரித்தனர். #KarnatakaCMrace #SCjudgewittyjoke 
    ×