என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித அன்னாள்"

    • இன்று தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 20-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    நாகர்கோவில் வடக்குகோணம் புனித அன்னாள் ஆலய குடும்பவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி விழாவில் நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, அதைதொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 20-ந்தேதி காலை 7.30 மணிக்கு பார்வதிபுரம் அருட்பணியாளர் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. ஆசாரிபள்ளம் அருட்பணியாளர் அருள்ஜோசப் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    21-ந்தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் தலைமை தாங்கி திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜோசப் காலின்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.
    புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.

    நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆடம்பர தேரோட்டம் நடைபெற்றது. இதில் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். மாலையில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை எடிசன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலயத்தின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய பெருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மே மாதம் 1-ந் தேதி பூண்டிமாதா பேராலய பங்குத்தந்தை பாக்கியசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.

    தொடர்ந்து ஆலயத்தில் தினசரி அருட்தந்தையர்கள் அருண்பேட்ரிக் மரிய ஜோமிக்ஸ் சாவியோ, யூஜின்டோனி, தங்கசாமி சுவக்கின் தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு கிராம பொதுமக்களின் சார்பில் செண்டைமேள முழக்கத்துடன் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய ஆடம்பர பெரிய தேரோட்டம் நடைபெற்றது. மாலை 6.30மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. விழாவில் புள்ளம்பாடி, கோவண்டாகுறிச்சி, புதூர்பாளையம், வெள்ளனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அன்னாள் அருள்பெற்று சென்றனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    ஆங்காங்கு பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை சதீஸ்ஏசுதாஸ், பட்டையதாரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் புனித அன்னாளின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். 
    ×