என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்மார்ட்வாட்ச்"
- கிஸ்மோர் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஏராளமான வாட்ச் ஃபேஸ் மற்றும் மெனு ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
- புது ஸ்மார்ட்வாட்ச் ஸ்ப்லிட் ஸ்கிரீன் மல்டி-டாஸ்கிங் வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கிஸ்ஃபிட் பிலாஸ்மா மாடலில் 1.9 இன்ச் 2.5D டிஸ்ப்ளே, 240x280 பிக்சல் ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறம் உள்ள சுழலும் கிரவுன் கொண்டு வாட்ச் ஃபேஸ், மெனு ஆப்ஷன்களை இயக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் ஸ்ப்லிட் ஸ்கிரீன் மல்டி டாஸ்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கிஸ்ஃபிட் பிலாஸ்மா மாடலில் பயனர் உடல்நலனை காக்க உதவும் ஃபிட்னஸ் அம்சங்கள், ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் யோகா, நீச்சல், ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி, கூடைபந்து, இறகு பந்து, கால்பந்து, மிதிவண்டி, ஹைகிங் மற்றும் டிரெகிங் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 24x7 இதய துடிப்பு சென்சார், உடல் வெப்பநிலை, ஸ்லீப், SpO2 மற்றும் ஸ்டெப் டிராக்கிங் போன்ற வசதிகளும் உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டண்ட், ப்ளூடூத் காலிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, IP67 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
கிஸ்ஃபிட் கிஸ்மோர் பிலாஸ்மா அம்சங்கள்:
பிரீமியம் கேசிங் மற்றும் மென்மையான சிலிகான் ஸ்டிராப்
1.9 இன்ச் UHD ஸ்கிரீன், 240x280 பிக்சல், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
ப்ளூடூத் 5 மற்றும் காலிங் வசதி
ஜிபிஎஸ்
சுழலும் கிரவுன் கண்ட்ரோல்
5 மெனு ஸ்டைல்கள், பிரைவசி லாக், ஸ்ப்லிட் ஸ்கிரீன்
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
உடல் ஆரோக்கிய சென்சார்கள்
கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
பில்ட் இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்
IP 67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப்
வயர்லெஸ் சார்ஜிங் வசதி
இந்திய சந்தையில் கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச்- பிளாக், நேவி புளூ மற்றும் பர்கண்டி என மூன்ற வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் உண்மை விலை ரூ. 1999 ஆகும். விற்பனை கிஸ்ஃபிட் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்டில் நடைபெறுகிறது.
- பெபில் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புது ஸ்மார்ட்வாட்ச் டிசைன் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.
பெபில் நிறுவனத்தின் புதிய காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. கடந்த வாரம் அறிமுகமான ஃபயர் போல்ட் கிலடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் IPS டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 320x385 பிக்சல் ரெசல்யூஷன், 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிப்புறத்தில் ரக்கட் தோற்றம், சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேசிங் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சுழலும் கிரவுன் மற்றும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் 5.0 வசதி கொண்டிருக்கும் பெபில் காஸ்மோஸ் என்கேஜ் இன்பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்குகிறது. இத்துடன் சமீபத்திய அழைப்புகள், ஸ்பீடு டயல் பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். இதனை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
புதிய பெபில் காஸ்மோஸ் என்கேஜ் சலமந்தர் ஆரஞ்சு, ஸ்டார்லைட், மிட்நைட் பிளாக் மற்றும் செலஸ்டியல் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 7 ஆயிரத்து 499 ஆகும். எனினும், இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விற்பனை பெபில் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
- ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- முன்னதாக ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் கிலேடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஃபயர் போல்ட் அறிமுகம் செய்தது.
ஃபயர் போல்ட் ராக்கெட் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், போட், அமேஸ்ஃபிட், ரியல்மி மற்றும் இதர பிராண்டு மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்ட ஃபயர் போல்ட் ராக்கெட் 1.3 இன்ச் HD டிஸ்ப்ளே, வலது புறம் பட்டன், IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெப், டிஸ்டன்ஸ், கலோரி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஃபயர் போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் கொண்டிருக்கிறது. இதனால் ப்ளூடூத் இணைப்பில் பயனர்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஃபயர் போல்ட் ராக்கெட் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், சில்வர் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஃபயர் போல்ட் வலைதளத்தில் நடைபெறுகிறது.
- ஒப்போ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ஒப்போ வாட்ச் 3 சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ வாட்ச் 3 மாடலின் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை அந்நிறுவனம் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும், இந்திய சந்தையில் ஒப்போ வாட்ச் 3 மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த வாட்ச் பற்றி எவ்வித தகவலும் இல்லை.
சர்வதேச சந்தையில் முதல் தலைமுறை ஒப்போ வாட்ச் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இந்த சாதனம் மெயின்லேண்ட் சீனா மற்றும் இதர பகுதிகளில் வெவ்வேறு பிராசஸர்களை கொண்டிருந்தது. ஒப்போ வாட்ச் 2 சீரிஸ் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ வாட்ச் 3 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

முதல் தலைமுறை ஒப்போ வாட்ச் மாடல் வெவ்வேறு பிராசஸர்களை கொண்டிருந்த நிலையில், ஒப்போ வாட்ச் 3 மாடல் சர்வதேச சந்தையில் வித்தியாசமான பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். மெயின்லேண்ட் சீனாவுக்கு வெளியில் ஒப்போ வாட்ச் SE மாடல் ஒப்போ வாட்ச் 3 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலையை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஒப்போ நிர்ணயம் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யும் மாடல்களில் முதன்மையான தேர்வாக கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 உள்ளன. இவை தவிர ஃபாசில் ஜென் 6 வெல்னஸ் எடிஷன் மற்றும் கூகுள் பிக்சல் வாட்ச் மாடல்கள் இதர தேர்வுகளாக உள்ளன. எனினும், இரு மாடல்கள் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேலக்ஸி வாட்ச் மாடல்கள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கின்றன.
ஒப்போ வாட்ச் 3 மற்றும் ஒப்போ வாட்ச் SE என இரு மாடல்களிலும் தலைசிறந்த ஹார்டுவேர் உள்ளது. இவற்றில் முறையே ஸ்னாப்டிராகன் W5 சிப், ஸ்னாப்டிராகன் 4100 பிளஸ் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் கோ பிராசஸர்களான அப்போலோ 4 பிளஸ் மற்றும் அப்போலோ 4s வழங்கப்படுகின்றன. மேலே உள்ள பிராசஸர் வியர் ஒஎஸ் 3.0-ஐ சீராக இயக்கும் திறன் கொண்டுள்ளன.
அந்த வகையில் ஒப்போ இரு ஸ்மார்ட்வாட்ச்களில் எதை அறிமுகம் செய்தாலும், சர்வதேச சந்தையில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். ஒப்போ வாட்ச் 3 சர்வதேச வெளியீடு பற்றி தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- பிளே நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய பிளேஃபிட் டயல் 3 உறுதியான கிளாஸ் டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
பிளே நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிளேஃபிட் டயல் 3 மாடலில் 1.8 இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட IPS டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ், கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.
குறைந்த எடை கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 2 வாட் ஸ்பீக்கர், அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கான பிளேடைம், 15 நாட்களுக்கு ஸ்டாண்ட் பை உள்ளது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ரத்த அழுத்தம், கலோரி, உறக்கம் மற்றும் ஏராளமான உடல்நல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஏராளமான பயிற்சி மோட்கள் பயனர்களின் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் வரும் போது ஸ்மார்ட்வாட்ச் வைப்ரேட் ஆகும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வாய்ஸ் அசிஸ்டண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து இயங்கும் திறன் கொண்டுள்ளது. பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் புளூ, சில்வர் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பிளேஃபிட் டயல் 3 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. விற்பனை பிளே அதிகாரப்பூர்வ வலைதளம், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிக ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
- நாய்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.
- புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இதில் 1.69 இன்ச் டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240x280 பிக்சல் ரெசல்யூஷன், 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் வலதுபுறம் பட்டன் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ஃபிட்னஸ் அம்சங்களை பொருத்தவரை நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், மென்ஸ்டுரல் சைக்கில் டிராக்கர் உள்ளது. இத்துடன் பயனரின் உறக்க முறைகள், மன அழுத்த அளவுகளை டிராக் செய்து மூச்சு பயிற்சி வழங்குகிறது.

இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz மாடலில் பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் டயல் பேட் மற்றும் சமீபத்திய அழைப்புகளை காண்பிக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, DND மோட், வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள், ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நாய்ஸ் கலர்ஃபிட் Caliber Buzz மாடலின் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், ரோஸ் பின்க், மிட்நைட் புளூ மற்றும் ஆலிவ் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
- நாய்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் ட்ரூ சின்க் தொழில்நுட்பத்தின் மூலம் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள் உள்ளன.
நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. ப்ளூடூத் சார்ந்து இயங்கும் புது நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் மாடலில் 1.38 இன்ச் TFT LCD ஸ்கிரீன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100-க்கும் அதிக வாட்ச ஃபேஸ்கள் உள்ளன. இதில் நாய்ஸ் உள்ள ட்ரூ சின்க் தொழில்நுட்பம் குயிக் பேரிங் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டில் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது.
இத்துடன் நாய்ஸ் ஹெல்த் சூட் மூலம் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2. ஸ்லீப் டிராக்கர், ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளது. இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்குசந்தை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.
நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் அம்சங்கள்:
1.3 இன்ச் TFT LCD ஸ்கிரீன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
ப்ளூடூத் காலிங் மற்றும் நாய்ஸ் ட்ரூ சின்க் தொழில்நுட்பம்
100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
24x7 இதய துடிப்பு சென்சார், SpO2
100-க்கும் அதிக வொர்க் அவுட் மோட்கள்
IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப்
ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது இரண்டு நாட்களுக்கான பேட்டரி லைஃப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், சில்வர் கிரே, ரோஸ் வைன், ரோஸ் பின்க் மற்றும் ஸ்பேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 12 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
- நாய்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் 24x7 ஹார்ட் ரேட் மாணிட்டரிங், SpO2 சென்சார்களை கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் 100 ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
நாய்ஸ் நிறுவனம் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு கலர்ஃபிட் ப்ரோ 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து புது மாடல் தற்போது அறிமுகமாகி இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை 1.85 இன்ச் TFT LCD ஸ்கிரீன், சதுரங்க வடிவம் கொண்ட டயல், 600 பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள நாய்ஸ் ட்ரூ சின்க் தொழில்நுட்பம் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது. இத்துடன் குயிக் பேரிங் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டை எடுத்துக் கொள்ளும் வசதி இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ளது.

நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2, ஸ்லீப் டிராக்கிங், ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 100 ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. கலர்ஃபிட் ப்ரோ 4 GPS மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி லைஃப் வழங்குகிறது.
நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS அம்சங்கள்:
1.85 இன்ச் 240x284 பிக்சல் TFT LCD ஸல்கிரீன், அதிகபட்சம் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
ப்ளூடூத் 5.3
ப்ளூடூத் காலிங் மற்றும் நாய்ஸ் ட்ரூ சின்க் தொழில்நுட்பம்
150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
24x7 இதய துடிப்பு சென்சார்
SpO2, ஸ்லீப் டிராக்கிங், ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட்
100 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
பில்ட்-இன் GPS மற்றும் GPS டிராக்கிங்
IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே
வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள்
கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல்
குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND
250 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS மாடல் சார்கோல் பிளாக், டீப் வைன், மிண்ட் கிரீன், சில்வர் கிரே, சன்செட் ஆரஞ்சு, டீல் புளூ, ரோஸ் பின்க் மற்றும் மிட்நைட் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி விட்டது. அறிமுக சலுகையாக நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 GPS மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் கொண்டுள்ளது.
- புது ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ஃபயர்-போல்ட் ராக்கெட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா மாடலில் 1.78 இன்ச் ஆல்வேஸ்-ஆன் AMOLED டிஸ்ப்ளே, 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மெல்லிய மெட்டாலிக் பாடி டிசைன் மற்றும் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட ஸ்டிராப் கொண்டிருக்கிறது. இதில் முழுமையாக இயங்கும் சுழலும் கிரவுன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 123 ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.0, இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர், இன்-பில்ட் வாய்ஸ் அசிஸ்டண்ட், இன்-பில்ட் கேம்ஸ், ஏராளமான வாட்ச் ஃபேஸ்கள், 8 யுஐ ஸ்டைல்கள் உள்ளன. இத்துடன் ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது. இவைதவிர ஏராளமான உடல்நல அம்சங்கள், சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா அம்சங்கள்:
1.78 இன்ச் AMOLED, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்
மெட்டாலிக் பாடி டிசைன், சுழலும் கிரவுன்
பல நிறங்களில் டெக்ஸ்ச்சர் கொண்ட ஸ்டிராப்கள்
ப்ளூடூத் காலிங்
123-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
இன்-பில்ட் கேம், இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி லைஃப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஃபயர்-போல்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எல்லோ, ஆரஞ்சு, புளூ, பிளாக், லைட் கோல்டு மற்றும் கோல்டு பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- கிஸ்மோர் பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது.
- புது ஸ்மார்ட்வாட்ச் IP67 சான்று, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
கிஸ்மோர் கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து கிஸ்மோர் பிராண்டின் புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் 1.85 இன்ச் டிஸ்ப்ளே, 15 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
1.85 இன்ச் வளைந்த, IPS டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ, 15 நாட்களுக்கு பேட்டரி லைஃப், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 450 நிட்ஸ் பிரைட்னஸ், ஏராளமான உடல்நலன் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் டிராக் செய்யப்படும் விவரங்கள் JYOU ப்ரோ ஹெல்த் சூட் உடன் இண்டகிரேட் செய்யப்படுகின்றன. கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் மாடலில் IP67 தர சான்று, ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் அம்சங்கள்:
1.85 இன்ச் IPS டிஸ்ப்ளே, 240x280 பிக்சல்
450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
ப்ளூடூத் காலிங் 5.0
ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட்
வாட்ச் ஃபேஸ்கள்
ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஹெல்த் மாணிட்டரிங், SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ் மற்றும் மென்ஸ்டுரல் டிராகிங்
இன்-பில்ட் கேம்ஸ், கால்குலேட்டர்
JYOU ப்ரோ ஆப் சப்போர்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கிஸ்மோர் பிலேஸ் மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பர்கண்டி மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,199 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- கார்மின் நிறுவனத்தின் புதிய இன்ஸ்டிண்ட் ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- புது கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.
பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் இந்திய சந்தையில் புதிய இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது சீரிசில் - இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மற்றும் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசம், கிராஸ்ஒவர் சோலார் மாடல் சூரிய சக்தி கொண்டு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
புதிய கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடலில் கார்மின் நிறுவனத்தின் அனைத்து உடல்நல அம்சங்கள், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஸ்லீப் ஸ்கோர், ஹெல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளது. இதன் சோலார் வேரியண்ட் 70 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் அம்சங்கள்:
புது ஸ்மார்ட்வாட்ச்களில் சூப்பர்-லூமி நோவா-கோட் செய்யப்பட்ட அனலாக் மற்றும் டஃப் டிசைன் உள்ளது. இத்துடன் அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே, 10ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் லென்ஸ், தெர்மல் மற்றும் ஷாக் ரெசிஸ்டண்ட், MIL-STD-810 தரம் கொண்டுள்ளது. இதன் சோலார் எடிஷன் 70 நாட்கள் பேட்டரி லைஃப் கொண்டிருக்கிறது.
கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் - ஸ்மார்ட்வாட்ச் மோடில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. ஜிபிஎஸ் மோடில் 110 மணி நேரத்திற்கும் அதிக பேட்டரி லைஃப் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லீப் ஸ்கோர், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஹெல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடல் பிளாக் நிறத்திலும், இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் கிராஃபைட் சோலார் கிராபைட் நிறத்திலும் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 55 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை கார்மின் பிராண்ட் ஸ்டோர், ஹெலியோஸ் வாட்ச் ஸ்டோர், ஜஸ்ட் இன் டைம், ஸ்போர்ட்ஸ் ஸ்டோர், அமேசான், டாடா க்ளிக், டாடா லக்சரி, சினர்ஜைசர், ப்ளிப்கார்ட் மற்றும் நைகா வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- ஃபயர்-போல்ட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.
- புது ஸ்மார்ட்வாட்ச்களில் SpO2 மாணிட்டர், ஹார்ட் ரேட் டிராக்கர் என ஏராளமான சென்சார்கள் உள்ளன.
ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. சாட்டன், டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் பெயர்களில் புது ஸ்மார்ட்வாட்ச்கள் அழைக்கப்படுகின்றன. சமீபத்தில் ஃபயர்-போல்ட் டாக் அல்ட்ரா மாடல் அறிமுகமான நிலையில், தற்போது இந்த மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.
மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் மேம்பட்ட ஹெல்த் சூட் வசதிகளான- SpO2, ஹார்ட் ரேட், ஸ்லீப் மாணிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று மாடல்களில் விலை உயர்ந்த ஃபயர்-போல்ட் சாட்டன் 1.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஃபயர்-போல்ட் சாட்டன் அம்சங்கள்:
1.78 இன்ச் 368x448 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
ப்ளூடூத் காலிங்- கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்
110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, பின்க், கிரே, சில்வர் மற்றும் கோல்டு பிளாக் நிறங்களில் கிடைக்கிறது

ஃபயர்-போல்ட் டாக் 3 அம்சங்கள்:
1.28 இன்ச் 240x240 பிக்சல் LCD ஸ்கிரீன்
ப்ளூடூத் காலிங்- கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்
123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, பின்க், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது
ஃபயர்-போல்ட் நிஞ்சா-ஃபிட் அம்சங்கள்:
1.69 இன்ச் LCD ஸ்கிரீன்
123 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
இன்பிலிட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்லீப், SpO2 மற்றும் ஹார்ட் ரேட் டிராக்கிங்
IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
வானிலை அப்டேட்கள், கேமரா மற்றும் மியூசிக் கண்ட்ரோல்
பிளாக், புளூ, சில்வர், பின்க், ரெட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஃபயர்-போல்ட் சாட்டன், டாக் 3 மற்றும் நிஞ்சா-ஃபிட் மாடல்களின் விலை முறையே ரூ. 3 ஆயிரத்து 999, ரூ. 2 ஆயிரத்து 199 மற்றும் ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்று மாடல்களில் ஃபயர்-போல்ட் சாட்டன் மற்றம் டாக் 3 மாடல்களின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
ஃபயர்-போல்ட் நிஞ்சா-ஃபிட் விற்பனை நாளை (ஜனவரி 29) துவங்குகிறது. மூன்று மாடல்களும் நாடு முழுக்க முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனைக்கு கிடைக்கின்றன.