search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்ரோயன்"

    • சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் அம்சங்கள் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
    • இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் வெர்ஷனின் விலை விவரங்களை அறிவித்து விட்டது. டாப் என்ட் ஷைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 10 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 27 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த காரிலும் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த வெர்ஷனில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஆறு ஏர் பேக் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் C3 மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் சிட்ரோயன் பசால்ட் மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் ரூ. 10 லட்சம்

    சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் வைப் பேக் ரூ. 10.12 லட்சம்

    சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 10.27 லட்சம் 

    • சிட்ரோயன் பசால்ட் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • பசால்ட் மாடல் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பசால்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பசால்ட் கூப் எஸ்யுவி விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இது அறிமுக விலை என சிட்ரோயன் தெரிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11,001 ஆகும்.

    புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடலின் அறிமுக விலை அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2024 சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் NA மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வடிவங்களில் வழங்கப்படுகிறது.

     


    இவற்றில் டர்போ வெர்ஷன் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. NA பெட்ரோல் யூனிட் 80 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் NA பெட்ரோல் யூனிட் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், இரட்டை அடுக்கு கிரில், சில்வர் ஸ்கிட் பிலேட்கள், வட்ட வடிவ ஃபாக் லைட்கள், பிளாக்டு அவுட் ORVM-கள், B-பில்லர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர்.
    • குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும்.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கூப் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பசால்ட் என்று அழைக்கப்படுகிறது. சிட்ரோயன் பசால்ட் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடல் வெளியீட்டுக்கு முன் இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

     


    அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 25 ஆயிரம் முன்பணம் செலுத்தி புதிய சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி-யை முன்பதிவு செய்து கொள்ளலாம். சமீபத்தில் இந்த காருக்கான டீசர்கள் வெளியிடப்பட்டன. அதில் புதிய கூப் எஸ்யுவி மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனள், 10.25 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சில்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று புதிய காரில் வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, டைப் சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 109 ஹெச்பி பவர், 215 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் பசால்ட் மாடல் டாடா கர்வ் மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
    • இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் எம்.எஸ்.டோனியை கவுரவிக்கும் விதமாக தோனி எடிஷன் சி3 ஏர்கிராஸ் என்ற புதிய காரை சிட்ரோயன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

    இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ.11.82 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சாதாரண சி3 ஏர்கிராஸ் காரின் விலை ரூ.8.99 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சிறப்பு காரில் டோனி கிளவ்ஸ் பெட்டி ஒன்று இருக்கும் என்றும், 100 கார்களில் ஏதேனும் ஒரு காரில் டோனி ஆடோகிராப் போட்ட அவரின் கிளவ்ஸ் ஒன்றும் இருக்கும் என்றும், இது இந்த காரை வாங்கும் டோனி ரசிகரை ஆச்சரியப்படுத்தும் என்று கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    • ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என தகவல்.

    ஜீப் நிறுவனத்தின் புதிய தலைமுறை ரெனகேட் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எஸ்.யு.வி. 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவல் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    புது கார் பற்றி அந்நிறுவனம் வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த கார் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த கார் சிட்ரோயன் நிறுவனத்தின் காமன் மாட்யுலர் பிளாட்ஃபார்மில் (CMP) உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சிட்ரோயன் C3 மாடல் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ஜீப் எஸ்.யு.வி. ரெனகேட் பெயரிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    புதிய ஜீப் ரெனகேட் மாடல் பேட்டரி எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை ரூ. 20 லட்சத்தில் துவங்கும் போது, அதன் பெட்ரோல் வெர்ஷனின் விலை சில லட்சங்கள் வரை குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில், புதிய ஜீப் எஸ்.யு.வி.யின் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கலாம். 

    • வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
    • பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    முன்புறம் ஓட்டுநர் மற்றும் பயணி இருக்கைகளில் ஏர்பேக், பெல்ட் லோடு லிமிட்டர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் சிட்ரோயன் eC3 குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஓரு நட்சத்திர குறியீடையும் பெறாவில்லை. இது சிட்ரோயன் வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

     


    சிட்ரோயன் eC3 மாடல் பெரியவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 49-க்கு 10.55 புள்ளிகளையே பெற்றது. இந்த கார் அதன் ஓட்டுநர் மற்றும் அவரின் அருகாமையில் அமரும் பயணிக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் நல்ல பாதுகாப்பை வழங்கியதாக குளோபல் NCAP தெரிவித்தது.

    எனினும், பக்காவாட்டுகளில் தலை பகுதிக்கு பாதுகாப்பு அளிப்பதை ஆப்ஷனாகவும் சிட்ரோயன் வழங்கவில்லை. காரின் ஒட்டுமொத்த உருவம் திடமாக இருந்தது என்று குளோபல் NCAP தெரிவித்துள்ளது.

    இவைதவிர சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்ற பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரியர் டோர் மேனுவல் சைல்டு லாக், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டோர் லாக் வசதியும் வழங்கப்படுகிறது.

    • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமேடிக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கார் மேக்ஸ் மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

     


    மேனுவல் ஆப்ஷனில் இந்த என்ஜின் 109 ஹெச்.பி. பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியன்ட் 109 ஹெச்.பி. பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரிமோட் என்ஜின் ஸ்டார்ட், ரிமோட் ஏ.சி. பிரீ-கன்டிஷனிங், 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 7 இன்ச் டி.எஃப்.டி. கிளஸ்டர், யு.எஸ்.பி. சார்ஜர், ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகின்றன.

    • டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    • இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது eC3 சீரிசில் புதிதாக டாப் என்ட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. eC3 மாடல் சிட்ரோயன் நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் ஹேச்பேக் ஆகும்.

    புதிய eC3 ஷைன் வேரியன்ட் விலை ரூ. 13 லட்சத்து 20 ஆயிரம் என துவங்கி ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. விலை அடிப்படையில் இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

     


    சிட்ரோயன் eC3 ஷைன் வேரியன்டில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, 15 இன்ச் அளவில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், லெதரால் சுற்றப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சிட்ரோயன் C3 மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • சலுகைகளின் பலன்கள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், சிறப்பு சலுகைகளை அறிவித்து இருந்தது. தற்போது சலுகைகளின் பலன்களை அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை உயர்த்தி இருக்கிறது.

    சிட்ரோயன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களுக்கான சலுகைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட தற்போது ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும்.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 30-ம் வரை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஹூண்டாய் டக்சன், ஸ்கோடா கோடியக் மற்றும் வோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.

    சிட்ரோயன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிட்ரோயன் C3 மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    • சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஒற்றை, ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக கிடைக்கிறது.
    • சமீபத்தில் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது பிளாக்ஷிப் கிராஸ்ஒவர், C5 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஜூலை மாதத்திற்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலன்கள் 2022 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மாடல்களுக்கு பொருந்தும், இவை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல்- ஷைன் என்று அழைக்கப்படும் ஒற்றை, ஃபுல்லி லோடட் வேரியன்ட் ஆக கிடைக்கிறது. இந்த மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் போக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. சமீபத்தில் தான் சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் நான்காவது கார் மாடல் ஆகும்.

    சிட்ரோயன் C3 மாடலை போன்ற ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் C3 ஏர்கிராஸ் மாடல் ஸ்டைலிங் அதன் முந்தைய மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிய காரின் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • டர்போ பெட்ரோல் ஆப்ஷனில் புதிதாக ஷைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • டர்போ வேரியண்ட் லிட்டருக்கு 19.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் ஹேச்பேக் C3 மாடலின் டர்போ வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய டர்போ வேரியண்ட் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு லிட்டருக்கு 19.3 கிலோமீட்டர் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்றுள்ளது.

    புதிய சிட்ரோயன் C3 டர்போ வேரியண்ட்களின் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. டர்போ பெட்ரோல் ஆப்ஷனில் புதிதாக ஷைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களான ESP, ஹில் ஹோல்டு, என்ஜின் ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் மற்றும் TPMS உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள், ரியர் பார்கிங் கேமரா, மேனுவல் டே/நைட் IRVM, மை சிட்ரோயன் கனெக்ட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. வெளிப்புறம் புதிய காரில் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன்புறம் ஃபாக் லேம்ப்கள், ரியர் ஸ்கிட் பிலேட்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய C3 மாடலில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஃபீல் டூயல் டோன் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஷைன் டூயல் டோன் ரூ. 8 லட்சத்து 80 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 92 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.
    • மூன்றாம் அடுக்கு இருக்கைகளை இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம்.

    சிட்ரோயன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி C3 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கார் மூன்று அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. இந்த கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    C3 ஏர்கிராஸ் மாடல் C3 ஹேச்பேக் மாடலை விட நீளமாக இருக்கிறது. இந்த காரின் நீளம் 4.3 மீட்டர்கள் ஆகும். தோற்றத்தில் இந்த காரின் முகம் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், கவர்ச்சிகரமான மோனோடோன் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

     

    இந்த காரின் முன்புற கிரில் 2 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர் பாடி நிறத்தால் ஆன பாகங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிளாக் கிலாடிங் உள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஃபாக்ஸ் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. பக்கவாட்டில் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டெயில்கேட் பகுதியில் C3 ஏர்கிராஸ் பேட்ஜ் மற்றும் ரியர் பம்ப்பரின் கீழ்புறத்தில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. C3 ஏர்கிராஸ் மாடலின் மிகமுக்கிய அம்சம் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் ஆகும். இவற்றை அதிக இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம். சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், மேனுவல் ஏசி, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிது. 

    ×